Sunday, December 29, 2024

GENRAL TALKS - மோசமான எண்ணங்கள் இல்லாத மனது !




ஒரு குருவும், சீடனும் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, அந்த ஆற்றை கடக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டனர். அவளது நிலையை உணர்ந்த குரு அவளை தூக்கிக் கொண்டு ஆற்றங்கரையை கடந்தார். பின்னர் தன் சீடனுடன் தான் செல்லவேண்டிய இடத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். சிறிது நேரம் அமைதி காத்த சீடன் மனதுக்குள்ளே இருக்கும் சஞ்சலத்தால் தவித்துக்கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தனது குருவிடம் “தாங்கள் எவ்வாறு ஒரு பெண்ணை தொட்டு தூக்கலாம்?” என்று வினவினான்.  குரு “நான் அவளை தூக்கி நெடு தொலைவு ஆற்றை கடக்க உதவியது உண்மைதான். ஆனால் அவளை நான் ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டேன். நீயோ இதுவரை உன் மனதில் அவளைத் தூக்கிக்கொண்டு வருகிறாயே?” என்று பதிலளித்தார். நிலையான, பற்றற்ற மனதிற்கும், பற்றுள்ள மனதிற்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் குட்டிக்கதை இது. நாம் அந்த சீடனைப் போல பலவற்றையும், பலகாலம் நமது மனதிற்குள் தூக்கிக்கொண்டு குறைகளோடு அலைகிறோம். நம்முடைய மனதுக்குள்ளே மோசமான எண்ணங்கள் இருக்க கூடாது என்று நம்முடைய மனதை தூய்மையாக வைத்துக்கொண்டு இருக்க வேண்டும். இங்கே எந்த வகை செல்வமும் நிலைத்து நிற்பது இல்லை. ஒரு கோடி சம்பாதித்தாலும் 10 வருடத்துக்கு உங்களுடைய மொத்த செலவுகளும் 10 இலட்சத்தில் முடிந்தால் மீதம் உள்ள செல்வத்தை மேலோகம் கொண்டு செல்ல முடியுமா என்ன ? அது போலவே உறவுகளும், உங்களை பற்றி அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து இருக்காமல் இதுதான் நீங்கள் என்று கண்டறிந்து உங்களை மேம்படுத்திக்கொண்டே இருங்கள். மற்றவருக்கு நீங்கள் செய்யும் உதவிகளை தவறாக பார்ப்பவர்களை பற்றி எல்லாம் யோசித்தால் சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிகளே செய்துகொள்ள முடியாது இல்லையா ? யோசனைகள் வேண்டாம் செயல்களை தொடங்குங்கள் !

No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...