அந்த நாட்டின் அரசனுக்கு ஒரே மகன். அவன் தான் பின்னாளில் அந்த நாட்டை அரசாளப்போகிறான். அரசன் தன் மகனுக்கு வித்தியாசமான உத்தரவை பிறப்பித்தார். ''நீ இதற்கு மேல் இளவரசன் கிடையாது. இந்த ராஜ்ஜியத்தை விட்டு விலகிச் சென்றுவிடு!'' என்பதே அந்த ஆணை.
இளவரசன் மீதிருந்த ஆபரணங்கள் பட்டாடைகள் எல்லாம் நீக்கப்பட்டன. அவனுக்கு கிழிந்த ஆடையே தரப்பட்டது. நள்ளிரவில் தங்கத்தேரில் அனுப்பப்பட்ட இளவரசன் நாட்டிற்கு வெளியே பிச்சைக்காரனைப் போல இறக்கிவிடப்பட்டான். வருடங்கள் கடந்தன. இளவரசன் பிச்சைக்காரனாகவே மாறிவிட்டான். தான் ஒரு இளவரசன் என்பதையே அவன் மறந்துவிட்டான். உடைக்காகவும் உணவுக்காகவும் இறுப்பிடத்திற்காகவும் பணம் தேவைப்பட்டதால் அவன் பிச்சையெடுப்பது இன்றியமையாததாக மாறிவிட்டது.
மிகக் கடுமையான கோடைக்காலம் வந்தது. அவனுக்கு உபயோகித்த இரண்டாம்தர காலணி தேவைப்பட்டது. அதனால் உணவு விடுதிக்கு வெளியே பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். சாலைகள் நெருப்பைப் போல சுட்டெரித்தன. அதனால் அவனுடைய கால் பாதங்கள் வெடித்து கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தன. எப்படியாவது ஒரு ஜோடி பழைய காலணியை பிச்சை வாங்கியே ஆக வேண்டும் என பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான்.
திடீரென அங்கே ஒரு தங்கத்தேர் வந்து நின்றது. தேரிலிருந்து இறங்கியவன் ''உங்களுடைய தந்தை உங்களை அழைக்கிறார். அவர் முதுமையால் இறந்துக் கொண்டிருக்கிறார். அதனால் அரசனாக பதவியேற்க உங்களை அழைக்கிறார்'' என்றான். அந்த ஒரு கனத்தில் பிச்சைக்காரன் மறைந்து போனான். முழுமையாக அரசனாக மாறிவிட்டான். அதே உடை அதே கால்கள் தான் உள்ளுக்குள் அவன் மாறிவிட்டான்.
.
அங்கே பெருக்கூட்டம் கூடிவிட்டது. அவனுக்கு உதவி செய்யாமல் போனவன் கூட ''நான் இவருடைய நண்பன்'' என அருகே வந்து நின்றான். அரையணா காசுக்காக கெஞ்சியனுக்கு அருகே நிற்பதையே பெருமையாக மக்கள் நினைத்தனர். ஆனால் அவன் ஒருவரையும் சட்டை செய்யவில்லை. நேரடியாக தேரில் ஏறியவன் ''ஒரு அழகான இடத்திற்கு தேரை செலுத்து. நான் குளித்து மாற்று உடைகளை அணிய வேண்டும்'' என தேரோட்டிக்கு உத்தரவிட்டான்.
அரண்மனைக்குள் நுழைந்தவன் நேராக அரசனிடன் சென்று ''தந்தையே ஏன் இத்தனை வருடங்களாக என்னை மறந்துவிட்டீர்? இன்னும் சில வருடங்கள் சென்றிருந்தால் நான் பிச்சைக்காரனாகவே செத்துப் போயிருப்பேன்'' என இளவரசன் கேட்டான். அரசன் ''இதை தான் என் தந்தையும் எனக்கு செய்தார். உன்னை ஆபத்தில் தள்ளும் எண்ணம் ஏதுமில்லை. உலக அனுபவங்களை நீ பெற வேண்டுமானால் அரசனுக்கும் பிச்சைக்காரனுக்குமான இடைவெளியை உணர்ந்திருப்பது அவசியம். அதற்கு இடையே தான் எல்லாமே அடங்கியுள்ளது'' என்றார்.
''உன்னை பிச்சைக்காரனாக நினைத்தது மற்றவர்கள் தான். அது உண்மையல்ல. அங்கே நீ அரசனாகவும் இல்லை பிச்சைக்காரனாகவும் இல்லை. உன் தோற்றத்தைப் பார்த்து அவர்கள் நினைத்தது தவறாகிப் போனது. உனக்குள் இருக்கும் அரசனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதை உணரும் வேளையில் நீ அரசனாகிவிட்டாய்'' என அரசன் சொன்னார்.
இதே போல்தான் கடவுளாகவே(ஞானமடைய) ஒரு கணத்தில் ஒருவனால் மாற முடியும். உலகில் உன் வாழ்வு வெளித்தோற்றமே. உள்ளுக்குள் இருக்கும் கடவுள் தன்மை என்றும் மாறாமல் இருக்கும்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
செவ்வாய், 17 டிசம்பர், 2024
STORY TALKS - EP.035 - இந்த விஷயத்துக்கு பெயர்தான் மூடத்தனம் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அலையே அலையே காட்டுல மழையே அலைலே அல்ல ட்யூட் செதற பதற உடுவன் நான் உதற அல்லல்லே அல்லா நண்பா ஊரும் ரத்தம் 10000 AURA வை கொண்டு அச்சாது ந...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக