இந்த விஷயம் நம்புவதற்கு கடினமாக இருக்கும் ஆனால் யோசித்து அமைதியாக ஒரு விஷயத்தை செய்தால் அதன் வெளிப்பாடு நன்றாக இருக்கும். ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை ஒரு மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை. நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார்.
சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர். ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடி தருகிறேன்" என்றான். விவசாயியும், "சரி! நீ போய் தேடிப்பார்" என்றார். மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான். அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார். "நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. ஒரு மறைந்த கல்லுக்கு பின்னால் பள்ளத்தின் அடியில் வாட்ச் விழுந்துள்ளது. கண்ணாடியும் உடைந்துள்ளது. பிறகு கண்டுபிடித்து எடுத்து வந்தேன்" என்றான். ஒரு காலத்தில் அமைதி இல்லாமல் இருந்ததால் முன்னேற முடியவில்லை. இருந்தாலும் இப்போது நம்மால் முன்னேற முடிகிறது என்றால் நாம் உருவாக்கிய அமைதியால்தான் முன்னேற முடிகிறது. இங்கே IQ அதிகமாக இருப்பவர்கள் யோசிக்காமல் அவசர அவசரமாக முடிவு எடுத்தாலும் ஜெயித்துவிடுவார்கள். இதனால் பொறாமைப்படவேண்டாம். நிறுத்தி நிதானமாக அமைதியாக யோசித்து முடிவு எடுப்பது எப்போதுமே பெஸ்ட் !
No comments:
Post a Comment