Sunday, December 1, 2024

STORY TALKS - EP.011 - கஷ்டப்பட்டு வாழ்க்கையில் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் ! [#004]



1. உங்களுடைய சந்தேகத்தை தூக்கி எறிந்தால்தான் நெடு நேரம் ஒரே விஷயத்தில் வேலை பார்த்து வெற்றி அடைய முடியும். உங்களுடைய சாக்கு போக்குகளை தூக்கி எறிந்தால்தான் கடின முயற்சியை உங்களால் கொடுக்க முடியும். 

2. இன்றைக்கு நீங்கள் அனுபவிக்கும் வலி நாளைக்கு நீங்கள் அதிகாரம் செலுத்தும் சக்தி என்பதால் வலியை அனுபவிக்க தயக்கம் காட்ட வேண்டாம். 

3. ஒரு எழுத்தாளர் மெதுவாக எழுதுகிறார் , தொடர்ந்து போராடுகிறார் , நேற்றைய நாளை விட இன்றைய நாளில் அவருடைய படைப்பை மேம்படுத்துகிறார். இதனாலேயே எழுத்து துறை சவாளானது. கண்டிப்பாக அதிர்ஷ்டம் இருக்கும் ஆட்கள் மட்டுமே இந்த துறையை தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார்கள். 

4. ஒரு குறிப்பிட்ட தூரம் முன்னேறிவிட்டால் எந்த காரணம் கொண்டும் உங்களை நீங்கள் சந்தேகப்பட கூடாது என்ற ஒரு நிலை உருவாகிறது. உங்களுடைய தூரத்தை சரியாக கணக்கு போட்டு வெற்றி பயணத்தை தொடங்குங்கள். நடு வழியில் யோசிக்க நேரம் செலவு பண்ண கூடாது. 

5. கடின உழைப்பில் உருவான தோட்டமே சுவையான கனியை தருகிறது , நறுமணம் மிக்க மலர்களை தருகிறது. கடின உழைப்பில் உருவாகும் விவசயமே உலகத்துக்கு தானியங்கள் தருகிறது. கடின உழைப்பில் உருவாகும் சுரங்க வேலையே பொன்னையும் பொருளையும் கொடுக்கிறது. கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும், நம்பிக்கை இழக்க வேண்டாம். நேர விரயம் பார்க்க வேண்டாம். 

6. உங்களுடைய கனவை அடைய பயணம் மேற்கொள்ளும்பொது எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நடந்த விஷயங்கள் சொதப்பினால் கூட உங்களுடைய கனவுக்கும் உங்களுக்கும் இருக்கும் தொலைவு குறைந்தது என்றால் கவலைப்படாமல் பயணத்தை தொடங்குங்கள். 

7. உயிரை கொடுத்து போராடும் கம்பெனியும் உப்புமா கம்பெனியும் ஒன்று அல்ல. ஒரு கம்பெனி என்றால் கண்ணை மூடிக்கொண்டு சேராமல் விழிப்போடு விசாரித்து சேர்ந்து வேலை செய்யுங்கள். 

8. நீங்கள் எடுக்கும் சவால்களால் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைப்பது இல்லை,. நீங்கள் அடைந்த உயரத்தால் மட்டுமே உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. 

9. கனவை எப்போதுமே ரேயாலிட்டியாக மாற்றும்போது நிறைய பேருக்கு நீங்கள் எதிரியாக வாய்ப்பு உள்ளது. கனவு எப்போதும் துணிவான சண்டைக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கிறது.

10. இன்றைக்கு தேதிக்கு நீங்கள் செய்வது சம்பவம். இந்த சம்பவங்களை சரியாக செய்தால் நாளையை தேதிகளில் நீங்கள் உருவாக்கியது சரித்திரமாக இருக்கும். 



No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...