Sunday, December 1, 2024

STORY TALKS - EP.007 - இவனுக்கு சரியான ஆள் இல்லை ! அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா !

 


மக்களை வைத்து எவ்வளவோ காசு பார்த்துவிட்டோம். மக்களுடைய எமோஷன்களை வைத்து அவர்களுக்கு முக்கியமானது என்னவெல்லாம் என்பதை ஆராய்ச்சி பண்ணி என்னென்ன வகையில் இவர்களுக்கு என்னென்ன விஷயங்கள் முக்கியமாக இருக்கிறதோ அனைத்தையும் வைத்து பணம் பண்ணுகிறோம். வேறு எதை வைத்து பணம் பண்ணுவது ?

இவர்களுடைய உடல் நலமும் இவர்களுக்கு முக்கியமானது இதனை வைத்து பணம் பண்ணலாமே என்பதும் இவர்களை போன்ற கார்ப்பரேட்களுக்கே வரும் யோசனை ! பாகுபலி வில்லன்களை விட நாகரீகமற்ற செயல்களில் இவர்கள் இறங்குவார்கள் நோய்களையும் பரப்புவார்கள். இவர்களை எப்படியாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தே ஆகவேண்டும். 

இவர்களுடைய வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மேலும் இவர்களுடைய வாழ்க்கையில் இவருடைய வாரிசுகள் மிகவும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் கடவுள் கொடுத்த இந்த பூமியை இஷ்டத்துக்கு மாசுபடுத்துகிறார்கள். 

சராசரியாக வாழக்கூடிய பண வசதி இல்லாதவர்கள் உட்பட பணத்துக்காக கஷ்டப்படும் அனைத்து குடும்பங்களையும் இவர்கள் பாதிக்கிறார்கள். மேலும் இவர்கள்தான் பெரிய கம்பெனிகள் என்பதால் இவர்களுக்கு எதிராக யோசித்தாலே கஷ்டப்பட்டு வேலை செய்யும் வேலை ஆட்களை வேலையை விட்டு தூக்கி எறிந்து பிளாக்மார்க் கொடுத்து மற்ற நிறுவனங்களில் சேரவும் முடியாமல் இருப்பதற்க்கு காரணமாக மாறுகிறார்கள். 

குறிப்பிட்ட சில நல்ல கம்பெனிகளை  நிறைய மோசமான கம்பெனிகள் குறுக்கு வழியில்தான் வெற்றியடைய வேண்டும் என்ற முடிச்சவிக்கித்தனத்தை பாலோ பண்ணுகிறார்கள். மேலும் இவர்கள் அடியாட்களை வைத்து தங்களை ஒரு குட்டி தாதாக்களாக மாற்றிவிட்டார்கள். 

தங்களுக்கு கிடைக்கக்கூடிய மக்கள் வாழும் பகுதிகளை எல்லாம் இவர்கள் தங்களுடைய ஆட்சி பரப்பாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பைனான்ஸ் கம்பெனியில் இருந்து போன் பண்ணி கேவலமாக கடனை வசூல் செய்வதற்காக கெட்டவர்கள் கெட்டவார்த்தை பேசி திட்டக் கூடிய இவர்களுக்கு யார் இந்த அளவு அதிகாரத்தை கொடுப்பது ? காரணம் என்னவென்றால் சட்டத்தின்படி இவர்களை தண்டிக்க முடியாத இவர்களின் நுணுக்கமான வேலைகள்தான் இந்த சட்டங்கள் எல்லாம் மாற்றப்பட வேண்டும். தெனாவெட்டு மிக்க கம்பெனிகள் கண்டிப்பாக தவறான விஷயங்களில் ஈடுபட்டால் நசுக்கப்பட வேண்டும்‌ . 


No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...