Sunday, December 22, 2024

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !




ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், “அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்” என்று நினைத்தான். அந்தக் காசை தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். பின்னாட்களில் அவனுக்கு நடக்கும் விஷயங்கள் எல்லாம் நிஜமாகவே அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருப்பதாக தோன்றவே அவனுக்கு எப்போதுமே முந்தைய நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. “எல்லாம் காசு கிடைத்த நேரம்” என நினைத்தான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. “என்ன ஆயிற்று?” என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு துளையிட்ட காசைப் போட்டு வைத்தேன்” என்றாள். ”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான். ”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். “உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான். ” என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்…! நாம் நேசிக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் நமக்கான அதிர்ஷ்ட பொருளாக அமைவது இல்லை. உண்மையான அதிர்ஷ்டம் சிறப்பான செயல்களில் உள்ளது. நாம் படும் கஷ்டத்திலும் உள்ளது. இதனால்தான் வாழ்க்கையில் நம்முடைய செயல்திறன் சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமானது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...