Tuesday, December 17, 2024

MUSIC TALKS - HOW TO WRITE A CLASSIC 60'S VILLAGE SONG ? - SARA SARA SAARAI KAATHTHU VEESUMPODHU SIR-AI PAARTHU PESUM PODHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சர சர சாரை காத்து வீசும் போது 
சாரை பார்த்து பேசும்போது 
சாரை பாம்பு போல நெஞ்சம் 
சத்தம்போடுதே

இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்தை பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்தை எழுதி தாரேன்
மூச்சு உட்பட !

டீ போல நீ என்னை ஏன் ஆத்துற ?

எங்க ஊரு பிடிக்குதா ? எங்க தண்ணீர் இனிக்குதா ?
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா ?
முட்டை கோழி புடிக்கவா ? மூணு படி சமைக்கவா ?
எலும்புகள் கடிக்கயில் என்னை கொஞ்சம் நினைக்கவா

கம்மஞ்சோறு ருசிக்க வா !
சமைச்ச கையை கொஞ்சம் ரசிக்க வா !
முடக்கத்தான் ரஸம் வைச்சு
மடக்கத்தான் பார்க்குறேன் 

இரட்டை தோசை சுட்டு வைச்சு 
காவல் காக்குறேன்
முக்கண்ணு நுங்கு நான் நிக்கிறேன்
மண்டு நீ தங்கம் ஏன் கேக்குற ?

புல்லு கட்டு வாசமா புத்திக்குள்ள வீசற 
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்டை வண்டி ஓட்டற கையளவு மனசுல 
கையெழுத்து போடுற கன்னி பொண்ணு மார்புல

மூணு நாளா பார்க்கலே ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான் கிறங்கி போறேன்யா 
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ 
கொத்தவே தெரியல மக்கு நீ

காட்டு மல்லிகை பூத்திருக்குது 
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...