Sunday, December 1, 2024

STORY TALKS - EP.009 - கஷ்டப்பட்டு வாழ்க்கையில் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் ! [#002]




1 . பயந்தவனும் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் ஜெயிக்கலாம். துணிந்தவனும் தான் தோன்றித்தனமாக செயல்பட்டால் தோற்கலாம்.

2. சினிமா நடிகர்கள் சமூகத்துக்கு பெரிய விஷயங்களை செய்வது இல்லை. சினிமாவுக்காக வாழ்க்கையை தொலைக்க வேண்டாம். உண்மையான ஹீரோக்கள் தொழில் துறையில் இருக்கிறார்கள். தொழில் துறையை நம்புங்கள்.

3. நம்ம வாழ்க்கையில் சில விஷயங்கள் மருந்தைப்போன்றது , ரொம்ப ரொம்ப கசப்பாக இருந்தாலும் சாப்பிட்டே ஆகவேண்டும். கொஞ்சம் வலியாக இருந்தாலும் நிறைய சோர்வாக இருந்தாலும் சரியான மருத்துவம் மட்டும்தான் உயிரை காப்பாற்றும்.

4. நீங்கள் ஆசைப்படும் விஷயங்களை உங்களுடைய மனம் வாங்க சொன்னால் கண்டிப்பாக கேட்க வேண்டாம், உங்களுக்கு தேவைப்படும் விஷயங்களை மட்டுமே வாங்குங்கள். உங்களுடைய ஆசைகளும் உங்களுடைய தேவைகளும் வேறு வேறானது.

5. உண்மையான மேச்சுரிட்டி எப்போதும் சபலத்தில் மாட்டிக்கொள்ளாத மனிதராக வாழ்வதில் இருக்கிறது.

6. உங்களை உதாசீனப்படுத்தி ஒருவர் பேசினால் உங்களுடைய எதிரியாக அவர் ஆகமாட்டார். உங்களுக்கு அவர் அவராக உருவாக்கிய ஒரு உருவத்தை பதிவு பண்ண முயற்சிக்கிறார். உங்களுக்கு இழப்பு நடந்தால்தான் உங்களுடைய சுய மரியாதையை கேள்வி கேட்க முடியும்.

7. வெற்றிக்காக ரொம்ப ரொம்ப அதிகமான நேரத்தை செலவு செய்து தேடுபவர்களுக்கு மட்டும்தான் வெற்றி கிடைக்கும். குறைவான நேரத்தில் வெற்றியை அடைய நினைப்பது நடக்காத காரியம்

8. நம்மால் நிகழ்த்த முடியாத சாதனைகள் எல்லாமே நாமாக கஷ்டப்பட்டு நிகழத்தாத வரைக்கும் நடக்காத காரியமாகவே இருக்கிறது

9. ஒரு முறை செய்த விஷயம் தவறாக போனால் மறுமுறை அந்த விஷயத்தை எடுத்து செய்ய தயக்கமே கூடாது. ஒரு முறை தப்பாக கட்டப்பட்ட கட்டிடம் இடித்த பின்னால்தான் சரியாக கட்டப்படுகிறது. இது கடினமான தவிர்க்க கூடாத ஒரு வாழ்க்கையின் விதி.

10. உங்களை உலகமே உடைத்து கண்ணாடி போல நொறுக்கினாலும் உங்களை நீங்கள் நம்பினால் நீங்கள் ஒரு நிஜமான சூப்பர் ஹீரோ.

No comments:

Post a Comment

STORY TALKS - EP.011 - கஷ்டப்பட்டு வாழ்க்கையில் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் ! [#004]

1. உங்களுடைய சந்தேகத்தை தூக்கி எறிந்தால்தான் நெடு நேரம் ஒரே விஷயத்தில் வேலை பார்த்து வெற்றி அடைய முடியும். உங்களுடைய சாக்கு போக்குகளை தூக்கி...