இங்கே நிறைய உயரமான விஷயங்கள் இருக்கிறது. ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் உயரமான புள்ளியை அடைந்தால்தான் உங்களால் மற்ற உயரமான விஷயங்களை கண்ணால் பார்க்கவே முடியும். தரையில் நின்றுகொண்டு மலையின் மேல் ஏற முயற்சிக்காமல் இருப்பதோ அல்லது மலை பிரதேசங்களை போட்டோவிலும் வீடியோவிலும் சும்மா பார்த்தால் மட்டும் மலை உச்சியை அடைய முடியுமா என்ன ?
நீங்கள் உங்கள் வாழ்க்கையின் கஷ்டமான விஷயங்களை வெற்றியடையும்போதுதான் உங்களுடைய மூளையின் திறன் அதிகமாகிக்கொணடு இருக்கிறது. சுலபமான செயல்களில் அடையும் வெற்றி உங்களுடைய மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பது இல்லை.
இன்றைக்கு தேதிக்கு உங்களுடைய வாழ்க்கையை நிரந்தரமாக மாற்ற நினைத்தால் கூட உங்களுக்கு இரண்டு வருடங்கள் தேவை. சென்ற வருடத்தில் நீங்கள் செய்த செயல்களின் பலனை மட்டும்தான் நீங்கள் இப்போது இந்த வருடத்தில் அனுபவித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஒரு வலிமையான உடம்பையோ , ஒரு சாமர்த்தியமான மனதையோ , ஒரு அன்பான குடும்பத்தையோ பணத்தை கொடுத்து வாங்க முடியாது. இத்தகையை விஷயங்கள் நிலைக்க வேண்டும் என்றால் சாகும் வரை உங்களுடைய வாழ்க்கையில் உங்களை சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மன அமைதி இருந்தால் வேகமாக கற்றுக்கொள்ளலாம் , நுணுக்கமாக சுற்றி நடக்கும் விஷயங்களை புரிந்துகொள்ளலாம், பக்குவமாக உங்களுடைய செயல்களை செய்யலாம், நாணயமாக உங்களுடைய வாழ்க்கையை வாழலாம்.
உங்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளது :
1. இப்போது இருக்கும் வாழ்க்கையை தொடர்ந்து கன்டின்யூ பண்ணலாம். பிரச்சனைகள் வந்தால் மட்டும் சரிபண்ணலாம்.
2. கடந்த கால வாழ்க்கை உங்களுக்கு நல்ல விஷயத்தை கொடுக்காமல் போவதால் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி சோதனை அடைப்படையில் இந்த புதிய வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தது போல பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment