Tuesday, December 17, 2024

STORY TALKS - EP.038 - வேற மாதிரி ! வேற மாதிரி !



ஒரு அபார்ட்மெண்ட் தெருவில் ஒரு அழகான பெண் தன் வீட்டு வாசலில் தினம் ஒரு அழகான இளைஞன் நிற்பதை பார்க்கிறாள். தினம் வருகிறான். ஒரு மணி நேரம் நிற்கிறான். எப்பவும் மொபைலை பார்த்து கொண்டு இருக்கிறான் ஆனால் அந்த பெண்ணை பார்த்து எந்த சைகையும் செய்யவில்லை! அப்பப்ப பார்ப்பதோடு சரி. அவன் வருவதும் இவள் பார்ப்பதும் என இப்படியே ஒரு வருடம் ஓடியது. அவளுக்கு நன்றாக புரிந்தது அவன் தன்னை காதலிக்கிறான் என்று. ஆனால் தன் காதலை சொல்ல வெட்க படுகிறான் என்று, சரி நாம தான் இந்த காதலை கூட செய்ய வேண்டும் என்று தன் பெற்றோரிடம் விசயத்தை சொல்லி அனுமதி வாங்க. பெற்றோர்களும் “சரிம்மா! ஆனால் எதற்கும் ஒரு வாட்டி அந்த பையனிடம் ஒரு வார்த்தை பேசி விடு” என்று சொல்ல. அன்று அவன் வர. அவனிடம் போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவனும் “எனக்கு தெரியும்” என்று சொல்ல. “எனக்கு உங்களை மிகவும் பிடித்து இருக்கு. கடந்த ஒரு வருடமாக நீங்கள் எங்கள் வீட்டுக்கு கீழே இருந்து என்னிடம் காதலை சொல்லாமல் பொறுமையாக இருந்தது எனக்கு உங்களை மேலும் பிடித்து இருக்கு. ஐ லவ் யூ”. என்று சொல்ல. அவன் “சாரி தங்கச்சி! நீங்கள் என்னை தப்பா புரிந்து கொண்டீர்கள். உங்கள் வீட்டில் நீங்கள் வைபை பாஸ்வோர்டு லாக் போடாமல் இருப்பதால் கடந்த ஒரு வருடமாக இங்க இருந்து பிரவுஸ் பண்ணி கொண்டு இருந்தேன். அப்புறம் தங்கச்சி! உங்க வீட்டு கீழே இருந்து தான் என் காதலிக்கு பேஸ்புக்கில் மெசேஜ் பண்ணி கொண்டு இருப்பேன்” என்று சொல்ல. அவளுக்கு சற்று மயக்கம் வந்தது. இன்டர்நெட் காலத்தில் காதல் இப்படியெல்லாம் வளர்ந்தே விட்டது. இருந்தாலுமே ஒருவருக்கு ஒருவர் உண்மையாக அன்பும் பாதுகாப்பும் கொடுத்துக்கொள்ளும் காதல் கதைகள் மட்டுமே காலத்தால் அழியாத விஷயங்கள், இதுதான் ரொமான்டிக் காமெடி படங்களை இன்றளவும் ரிலேட்டபிலாக வைத்து இருக்கிறது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...