1. இங்கே எல்லோருமே கெட்டவர்கள்தான், யாருமே நல்லவர்கள் கிடையாது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் விஷம்தான்.
2. ஜெயிப்பவர்கள் வரலாற்றில் நிலைக்க மாட்டார்கள் , உண்மையில் தன்னுடைய வேல்யூவை அதிகப்படுத்தும் மக்கள்தான் வரலாற்றில் நிலைப்பார்கள்.
3. பூமியின் 99 சதவீத மக்களை வெறும் ஒரு சதவீதத்துக்கு குறைவாக இருக்கும் பணக்காரர்கள் அதிகாரம் பண்ணுகிறார்கள். இங்கே ஜெயிப்பவனுக்கு எல்லாமே சொந்தம்.
4. நேசிக்கும் நண்பர்களும் எப்போது வேண்டுமென்றாலும் எதிரி ஆகலாம். உங்களை ஆதரிக்கும் உறவுகளும் எப்போது வேண்டுமென்றாலும் உங்களை பயன்படுத்திக்கொண்டு கைகழுவலாம்.
5. முயலும் ஜெயிக்காது ஆமையும் ஜெயிக்காது. இவைகளை சாப்பிடும் அளவுக்கு பலமுள்ள சிறுத்தையும் கழுகும் மட்டுமே ஜெயிக்கும். நல்லோராக இருந்தாலும் தங்களின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
6. ஒரு கட்டத்துக்கு மேலே கைகளை பிடித்து உங்களை யாருமே அழைத்து செல்ல மாட்டார்கள், நீங்கள்தான் உங்களுடைய பாக்கெட்டில் கைகளை போட்டுக்கொண்டு நடக்க வேண்டும்.
7. தனிமையாக இருப்பவர்களிடம் எப்போதும் கவனமாகவே இருங்கள். கண்டிப்பாக இவர்களுக்கு உள்ளே மறைத்து வைத்து இருக்கும் ரகசியங்கள் இவர்களை ஆபத்தானவர்களாக மாற்றி இருக்கிறது.
8. உங்களுடைய உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். பொதுவான விஷயங்களாக சட்டத்துக்கும் சமூகத்துக்கும் மட்டுமே உங்களுக்கு அடுத்தவர்கள் கொடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தேடுங்கள்.
9. உங்களுக்கு சரியாக பட்டாலும் தவறாக பட்டாலும் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் கண்டிப்பாக செய்துவிடுங்கள், உங்களை வாழ்க்கை இன்று கட்டாயப்படுத்துகிறதே என்று கலங்க வேண்டாம். உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் உங்களிடம் போதுமான பலமும் பணமும் இருந்தால் போதும்.
10. உங்களுக்கான புதையலை நீங்களாக தேடுவதை விட உங்களுக்காக வேலைபார்க்கும் ஆட்கள் தேடுவதுதான் உங்களுக்கு நிச்சயமாக புதையல் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment