Thursday, December 19, 2024

STORY TALKS - EP.043 - EPPAVUME VARUTHAPPADAATHA VAALIBAR SANGAM - TAMIL QUOTES - கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட விஷயங்கள் !




1. உங்களுடைய கெட்ட பழக்கங்களை உங்களுக்காக விடுங்கள் , அடுத்தவர்களுக்காக விட வேண்டாம். உங்களுக்காக விட்டால் மறுபடியும் அந்த கெட்ட பழக்கம் வராது. ஆனால் இன்னொருவருக்காக விட்டால் கண்டிப்பாக மறுபடியும் உங்களை அந்த கெட்ட பழக்கம் தாக்கிவிடும். 

2. உங்களுடைய வாழ்க்கையை கண்டிப்பாக நீங்கள் மறுபடியும் மறுபடியும் ரிவிஷன் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு சிஸ்டம் இப்போதைக்கு சரியாக இருந்தாலும் வருடத்துக்கு வருடம் மாதத்துக்கு மாதம் அப்டேட் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். 

3. மனிதர்கள் உங்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிரபார்க்கிறார்கள். இவர்களுக்காக நீங்கள் உங்களுடைய கேரக்ட்டர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் உங்களை பயமுறுத்துகிறது. குறிப்பாக அன்-ரியலான எதிர்பார்ப்புகளை வைக்க கூடாது. உண்மையில் நடக்காத விஷயங்களை எதிர்பார்ப்பது ரொம்பவுமே தப்பானது. 

4. பாஸிட்டிவான நோக்கம் வேண்டும் , எப்போதுமே பாஸிட்டிவான எண்ணங்கள் வேண்டும் என்று இருப்பதெல்லாம் நல்ல விஷயம்தான் , உங்களுடைய எதிரிகளை எதிர்த்து இவர்களின் நஞ்சு செயல்களை பொடிப்பொடியாக காணாமல் போக வைக்காமல் உங்களுடைய மனதுக்குள் எவ்வளவு பாஸிட்டிவிட்டி இருந்தாலும் வேலைக்கே ஆகாது. 

5. உங்களின் கரங்கள் எப்படி செயல்படுகிறதோ அதை பொறுத்து உங்களுக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. உங்களின் வேலைக்காரர்களின் கரங்களே உங்களுக்கு இன்னும் இன்னும் அதிகமாக மரியாதையை கொடுக்கிறது. 

6. இதுதான் உலக எதார்த்தம். இங்கே வெறும் 2-3 பெர்ஸன்ட் நல்லவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்களுக்காக 97 பெர்ஸன்ட் கெட்டவர்களை சமாளிக்க தெரியாத பிரச்சனையில் சிக்க வேண்டாம். 

7. ஒரு நாள் நடிக்கலாம் ஆனால் ஒரு ஒரு நாளும் நடிக்க முடியாது. இங்கே நிஜாவாழ்க்கையில் நடிப்பவர்கள் ஆரம்பத்தில் ஒரு நல்ல வெற்றியை அடைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை முழுக்க தோல்வியை மட்டுமே சந்தித்து மோசமான உடல்நலத்தையும் சந்திக்கிறார்கள்.

8. உங்களுடைய குழு மிகவும் திறமையான மக்களாக இருந்தாலும் உங்களை மதிக்கவில்லை அல்லது அவமரியாதை பண்ணுகிறார்கள் என்றால் யோசிக்காமல் வெளியே வந்துவிடுங்கள். யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். அவர்களுடைய திறமைகள் அதிகம் என்றாலும் அவைகளை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தாத ஆட்களோடு சேராமல் இருப்பதே நல்லது. 

9. நாம் பணம் சம்பாதிக்கும் ஒரு விஷயம் நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஒரு முறை செய்தால் மட்டும் போதாது. மறுபடியும் மறுபடியும் செய்ய வேண்டும். அந்த நல்ல விஷயம் கொடுக்கும் சம்பளத்தை பெற்று பொருள் ஈட்ட வேண்டும். 

10. வெற்றிகளை நம்ப வேண்டாம் , உங்களின் செயல்களை மட்டும் நம்புங்கள். வெற்றி எப்போதோ உங்களை விட்டு சென்றுவிடும் ஆனால் உங்களுடைய செயல்கள் எப்போதுமே உங்களை விட்டு போகவே போகாது. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...