Tuesday, December 17, 2024

STORY TALKS - EP.032 - வணிக அளவிலான சந்தைப்படுத்தும் போட்டிகள் !



ஒரு டவுனில் மூன்று டேய்லர்கள் டேய்லரிங் கற்று முடித்து கடை வைத்து இருந்தார்கள். தொழிலில் நன்றாகத் தேர்ச்சியடைந்த பின் முன்னேற்றத்தைத் தேடி மூவரும் ஒரு பெரிய நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மூவரும் நகரின் பிரதான சாலையில் தங்களுக்கு தகுந்த இடத்தை வாடகைக்குப் பிடித்து, தங்கள் தொழிலைத் தனித்தனியாகச் செய்யத் துவங்கினார்கள். அடுத்த நாள் காலை, முதலாமவன், தன் கடை வாசலில் கீழ்க்கண்டவாறு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான் “நகரின் மிகச்சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார். அதேபோல இரண்டாவது ஆசாமியும் தன் கடை வாசலில் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான். “உலகின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்” இரண்டையும் கண்ணுற்ற மூன்றாமவன், திகைத்துப்போனான். அதே போல தன் கடை வாயிலும் ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைக்க விரும்பினான். அத்துடன் தன்னுடைய கடைப்பலகை அவை இரண்டையும் விட மேன்மை உடையதாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். பலமாக யோசனை செய்து, அடுத்த நாள் இப்படி ஒரு அறிவிப்புப் பலகையை வைத்தான். “இந்தத் தெருவின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே கடை வைத்திருக்கிறார். ஒருமுறை தைத்துப் பாருங்கள்” மூன்றாவது ஆசாமியிடம் கூட்டம் சேர்ந்தது! உங்களுடைய நலம் ஒரு பக்கம் இருந்தாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் என்ன நல்ல விஷயம் செய்யப் போகிறீர்கள் என்பதுதான் அதி முக்கியமானது. அதுதான் அதிகமான வரவேற்பைப் பெறும். ஒரு சந்தைப்படுத்தும் செயல்முறை உங்களுடைய திறன்கள்ளின் அளவீட்டை மட்டும் சொல்லி பெருமைப்படுவது அல்ல உங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் வெகு ஜனங்களை சென்றடைய வேண்டும் என்பதால் சந்தைப்படுத்தும்போது கவனமாக சந்தைப்படுத்த வேண்டும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...