ஒரு காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் படபடவென்று அடித்தபடி கூவியது. பறவைகளின் மொழி அறிந்த வீரனை அழைத்தான் அவன். “இந்த பறவை என்ன சொல்கிறது?” என்று கேட்டான். “அரசே! அந்தப் பறவை நம்மைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உழவன் ஒருவன் புல் வெட்டுவதற்காக வருவான். அவன் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்று சொன்னது!” என்றான் அவன். அப்போது கையில் அரிவாளுடன் உழவன் ஒருவன் அந்த வழியாக சென்றான்.”பறவை சொன்னதில் பாதி நடந்து உள்ளது. மீதியும் நடக்கிறதா?” என்று அறிய ஆவல் கொண்டான் அரசன். தன் வீரர்களுடன் அங்கேயே தங்கினான். இவ்வாறு சில மணி நேரங்கள் கடந்து மாலை நேரம் வந்தது. தலையில் புல் கட்டுடன் அந்த உழவன் திரும்ப வந்தான். இதைப் பார்த்த அரசன் குறி சொன்ன வீரனை அழைத்தான். “இந்த உழவனைப் பாம்பு கடிக்க மறந்துவிட்டதா அல்லது இவன் எமனை ஏமாற்றி விட்டானா? உன்னால் எனக்கு ஒருநாள் வீணாயிற்று. சாவில் இருந்து இவன் எப்படித் தப்பித்தான். காரணம் சொல். இல்லையேல் பொய்களை சொல்லி சமாளித்த குற்றத்துக்காக உன்னை யாரும் காப்பாற்ற முடியாது!” என்று கோபத்துடன் கத்தினான். “அரசே! பறவை எதிர்கால தீர்க்க தரிசனமாக சொன்ன மொழி இதுவரை தவறியது இல்லை. இவன் உயிர் பிழைக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும். இவனை விசாரித்தால் உண்மை தெரியும்!” என்றான் அந்த வீரன். தலையில் புல் கட்டுடன் அவர்கள் அருகில் வந்தான் உழவன். அந்தப் புல் கட்டில் அரிவாள் ஒன்று செருகப்பட்டு இருந்தது. “உழவனே! புல் கட்டைக் கீழே போடு!” என்றான் அந்த வீரன். அவனும் புல் கட்டைக் கீழே போட்டான். புல் கட்டு விழுந்த வேகத்தில் அதைக் கட்டியிருந்த கயிறு அறுந்தது. உள்ளே இருந்த புற்கள் பரவலாக விழுந்தன. அதில் பாம்பு ஒன்று வெட்டப்பட்டு இறந்து கிடப்பது தெரிந்தது. இதைப் பார்த்து எல்லாரும் வியப்பு அடைந்தனர். அந்த வீரன், ”அரசே! இந்தப் பாம்பு இவனைக் கொல்ல வந்திருக்கிறது. இது எப்படி இறந்தது என்று தெரியவில்லை!” என்றான். அந்த உழவனைப் பார்த்து அரசன், ”நீ புல் வெட்டக் காட்டிற்குள் சென்றாய். அங்கே விந்தையான நிகழ்ச்சி ஏதாவது நடந்ததா?” என்று கேட்டான். “அரசே! அப்படி எதுவும் நடக்கவில்லை. வழியில் முதியவர் ஒருவர் வந்தார். நான் அவரைப் பணிவாக வணங்கினேன். நீடூழி வாழ்க என்று என்னை வாழ்த்தினார்!” என்றான் அவன். இதைக் கேட்ட அந்த வீரன், ”அரசே! அந்த முதியவரின் வாழ்த்துதான் இவனைக் காப்பாற்றி உள்ளது. உயர்ந்த சான்றோர்களின் சொற்கள் விதியையும் மாற்றும் வல்லமை வாய்ந்தவை!” என்றான். அதைக் ஏற்றுக் கொண்ட அரசன் அந்த வீரனுக்கும், உழவனுக்கும் பரிசு அளித்துச் சிறப்பித்தான். நம்முடைய வெற்றிகளுக்காக நமக்காக சந்தோஷப்படவோ அல்லது தோல்விகளை சொல்லி உதாசீனப்படுத்தாமல் இருக்கவோ மற்றவர்களுக்கு தெரியாது. இருந்தாலும் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் மனம் கொண்டு ஆசீர்வதித்தால் கண்டிப்பாக மற்றவர்கள் நன்றாக இருப்பார்கள்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! #7
நம் வாழ்வில் நம் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கற்பனையில் வாழக் கூடாது. இதைப் புரிந்துகொள்வது உங்களுக்...
-
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே இது என்ன முதலா ? முடிவா ? இனி எந்தன் உயிரும் உனதா ? புது இன்பம் தாலாட்...
-
The Slight Edge – Jeff Olson The Motivation Manifesto – Brendon Burchard The Art of Work – Jeff Goins The Power of Starting Somethin...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக