செவ்வாய், 10 டிசம்பர், 2024

STORY TALKS - EP.018 - MEYYALAGAN - TAMIL MOVIE REVIEW - திரை விமர்சனம் !



இப்பொழுது எல்லாம் மெய்யழகன் போன்று கதையை மட்டும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை கொடுக்கும் படங்கள் குறைவாகவே காணப்படுகிறது. தன்னுடைய உறவினர்களால் வஞ்சிக்கப்பட்டு சொந்த வீட்டை இழந்து வெளியூருக்கு குடியேறி சொந்த வீட்டையும் உறவினர்களையும் பார்க்க கூடாது என்று முடிவெடுத்த  பல வருடங்கள் போன பின்னாலும் சின்ன வயதில் இருந்து அன்பு வைத்து இருக்கும் ஒரு உறவினர் வீட்டு சகோதரியின் திருமண நிகழ்வுக்கு வரும்போது எதிர்பாராத விதமாக சொந்தக்காரர்கள் வெறுப்பை கக்கினாலும் மெய்யழகன் என்ற ஒரு தூரத்து சொந்த நண்பர் மட்டும் நெருக்கமாக பழக்குகிறார். ஆரம்பத்தில் அவரை வெறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அன்பாக அவர் பழகுவதை பார்த்து ஆச்சரியப்படுகிறார் அருள் மொழி ஆனால் அவருக்கு அவரை அடையாளம் தெரியவே இல்லை. இந்த விஷயங்கள் எப்படி இவர்களுக்குள்ளே ஒரு மரியாதையை உருவாக்குகிறது வாழ்க்கையின் பயணத்தின் முக்கியமான ஞானத்தை அளிக்கிறது என்று ஒருவரி கதை ஒரு முழு படமாக இருந்தாலும் ஒரு ஒரு காட்சியிலும் படமும் நடிப்பும் செதுக்கப்பட்டு உள்ள எதார்த்த படைப்புதான் இந்த மெய்யழகன் என்ற திரைப்படம். இப்போது எல்லாம் புஷ்பா , ராக்கி பாய் , போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள்தான் வெற்றி அடையும் என்று ஒரு விஷயம் இருப்பதாலோ என்னவோ இந்த மாதிரியான எதார்த்த படங்கள் பெரும் வரவேற்பை பெறுவது இல்லை. இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் குறைவுக்கு ப்ரொடக்ஷன் குழு அரசியல் பிரச்சனையும் ஒரு காரணமாக இருந்து இருக்கலாம் ஆனால் அது வெறும் கெஸ்தான். நிச்சயமாக சொல்ல முடியாது. அரவிந்த் சாமி கண்டிப்பாக ஒரு நல்ல கம்பேக் கொடுத்து இருக்கிறார், உண்மையான வாழ்க்கையில் வணிகத்தில் அரவிந்த் மிகப்பெரிய கோடிஸ்வரராக வளர்ந்துவிட்டாலும் ஒரு கதாப்பத்திரமாக ஏற்று நடிக்கும்போது அவருடைய சின்ன சின்ன எக்ஸ்ப்ரேஷன்களும் நெஞ்சுக்குள் ஆழமாக பாதிக்கிறது. கார்த்தி வந்திய தேவன் கதாப்பத்திரத்துக்கு பின்னால் ஒரு வோர்த்தான ஃபேமிலி ஹீரோ கான்செப்ட் பண்ணி ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். மற்றபடி எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால் கண்டிப்பாக உங்களை சர்ப்ரேஸ் பண்ணும் ஒரு பட்ஜெட் படம்தான் இந்த படைப்பு !

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...