Sunday, December 22, 2024

GENERAL TALKS - இன்னொருவருக்கு அட்வைஸ் பண்ணும் முன்னால் !



இந்த சிறுகதை எனக்கு பிடித்து இருந்தது. தன்னுடைய மகன் மிகுந்த இனிப்பு சாப்பிடுவதை நினைத்த தாய் மிகவும் கவலை கொண்டு, அந்த பழக்கத்தை மாற்ற பல வழிகளில் முயன்றாள், ஆனால் அவளால் முடியவில்லை. கிராமத்தில் எல்லோரும் மரியாதையாக நினைக்கும் ஒரு நபரிடம் தன்னுடைய மகனை அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். தாய் தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு அந்த நபரை சந்தித்து, “என்னுடைய மகன் எப்பொழுதும் இனிப்பு சாப்பிட்டு கொண்டு இருக்கிறான். தயவு செய்து இது உடல் நலத்திற்கு கேடு என்று அவனுக்கு அறிவுரை கூற முடியுமா?" என்று கேட்டுக் கொண்டாள். தாய் கூறுவதை கேட்ட, அந்த நபர் சிறிது நேரம் யோசித்தார், அந்த நேரத்தில் அந்த பையனுக்கு எந்த அறிவுரையும் கொடுக்க மறுத்துவிட்டார். ஒரு மாதம் கழித்து அவருடன் திரும்பும்படி அந்த தாயிடம் கூறினார். தாய் ஒரு மாதம் கழித்து தன் மகனை அழைத்துக் கொண்டு வந்தாள், ஞானி அந்த சிறுவனை பார்த்து “நீ இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும், ஏனென்றால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல" என்று அறிவுறுத்தினார். சிறுவனும் இனிமேல் இனிப்புகளை சாப்பிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்தான். அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து மகனுடைய தாய் திரும்பி வந்து, “உங்களுடைய உதவிக்கு நன்றி. நான் முதலில் உங்களிடம் வந்த போது. இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தும்படி ஏன் என் மகனிடம் கூறவில்லை? அதற்கு மாறாக ஒரு மாதம் கழித்து ஏன் வர சொன்னீர்கள்?" என்று கேட்டாள்.  சிரித்தபடியே “நான் அந்த நேரத்தில் இனிப்பு சாப்பிட்டு கொண்டிருந்தேன், உன் மகனிடம் இனிப்பு சாப்பிடாதே என்று கூறுவதற்கு அப்போது எனக்கு தகுதி இல்லை, ஆனால் இப்போது நான் இனிப்பு சாப்பிடுவதை விட்டுவிட்டேன், அதனால் உன் மகனிடம் என்னால் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று கூற முடிந்தது" என்றார். இந்த சிறுகதையின் அடைப்படையில் பார்த்தால் இந்த வலைப்பூவே நான் டிஸைன் பண்ண தகுதியாக ஒரு நிலைக்கு வரவில்லை. இருந்தாலும் இன்டர்நெட்டில் கிடைக்கும் தகவல்களை உங்களுக்காக பகிர்ந்துகொள்ள இந்த வலைப்பூவை பயன்படுத்துகிறேன், இந்த வலைப்பூ அட்வைஸ் எல்லாமே ஒரு ஜெனரல் பேச்சு என்று எடுத்துக்கொள்ளுங்களேன். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...