வெள்ளி, 20 டிசம்பர், 2024

STORY TALKS - EP.045 - தெரியாத மனிதர்களிடம் அன்பு ?



ஒரு நகர்ப்புற பகுதியில் எப்போதுமே அன்போடு ஒரு இளைஞர் தினமும் கடை வைத்து இருக்கும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு "இல்லையேப்பா நல்லா தானே இருக்கு" என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், "ஏங்க பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு! என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், "அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க! நான் இப்படி குறைகூறி கொடுப்பதால் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க" என்றார்! தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு, அந்த பாட்டியிடம், "அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்! இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்?" உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு, "அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி கொடுத்து சாப்பிட வைக்கிறான்! இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான்! நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை! மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது" என்றார் அன்போடு. இந்த மாதிரியான தெரியாத நபர்களுக்கு கூட அன்பு காட்டுவது ஒருவர் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடினமான காரியமாக இருக்கிறது. இருந்தாலும் இப்படியும் மக்கள் தங்களின் சுயநலம் மட்டுமே பாராது இன்னொருவருக்கும் நன்மை நடக்க வேண்டும் என்று நினைப்பதால் இந்த சமூகம் சிறப்பான சமநிலையில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது ! 

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...