Sunday, December 8, 2024

KONCHAM PERUKKU YAAR MELUM NAMBIKKAI IRUKKADHU ! - SPECIAL POST !






காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன் ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். இவனை காப்பாற்ற இப்போது ஆளில்லை. "யாராவது என்னை தூக்கி விடுங்கள். கஷ்டம் தாங்க முடியவில்லை. காப்பாற்றுங்கள்" என்று இவனோ கூவி கூவி கதறினான். கடைசியாக இவனை காப்பாற்ற ஒருவர் வந்து விட்டார். வந்தவர், குழியில் இவன் விழுந்து இருப்பதை பார்த்து, ”அடடா! கீழே விழுந்து விட்டாயா! கவலைப்படாதே நான் உன்னை காப்பாற்றுகிறேன்" என்றார். முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, ”இதோ! இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள்! நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார். இவனோ! கயிறை பிடித்து கொள்ள மறுத்தான். "ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே! இங்கு என்னை தவிர ஆள் கிடையாது. இந்த கயிறை பிடித்துகொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையோடு கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர். "அது சரி. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?” என்றான் விழுந்தவன். "கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிறு. நிச்சயமாக நான் உன்னை தூக்கி விட்டுவிடுவேன்" என்றார் வந்தவர். "கயிறு அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?” என்றான் விழுந்தவன். "கவலையே படாதே! நான் கை விடவே மாட்டேன். சளைக்க மாட்டேன். நீ இடுப்பில் இந்த கயிறை கட்டி கொண்டு விட்டால், உன்னை நிச்சயமாக இழுத்து விடுவேன் என்றார் வந்தவர்.
"இழுத்து விடுவேன் என்று சொல்கிறீர். என்னை இழுக்க உங்களுக்கு தெம்பு உண்டா?” என்றான் விழுந்தவன். "தெம்பு இருப்பதால் தானே இப்படி சொல்கிறேன்.” என்று வந்தவர் சொல்ல "தெம்பு இருப்பதாக நினைத்து கொண்டு இப்படி சொல்கிறீரோ?” என்று சந்தேகத்துடன் விழுந்தவன் கேட்க, "நான் ஒரு காலும் உன்னை விழவே மாட்டேன் கவலையே படாதே!” என்று வந்தவர் சொல்ல, "அது சரி. நீங்கள் விழ மாட்டீர்கள் என்றாலும், என் பலத்தையும் சேர்த்து, நீங்கள் எப்படி தூக்க முடியும்? என்னை கரையேற்றுகிறேன் என்று சொல்லி நீங்களும் விழுந்து விட்டால்?” என்று விழுந்தவன் கேட்க, "நான் திடமானவன் நான் திடமானவன் என்பதாலேயே நானும் விழ மாட்டேன். பிறரையும் விழ செய்யவும் மாட்டேன். தைரியமாக அந்த கயிறை பிடி" என்றார் வந்தவர். "அதெல்லாம் முடியாது. நீங்கள் போங்கள். ஒருவேளை நீங்கள் என்னை கரையேற்றி விட்டாலும், காப்பாற்றியதற்கு பணம் கொடு என்று கேட்பீர்கள்" என்றான் விழுந்தவன். "நீ எனக்கு ஒன்றுமே கொடுக்க வேண்டாம். நீ கஷ்டப்படுகிறாய். என்னால் காப்பாற்ற முடியும். கஷ்டப்படுவது உன் நிலையாக உள்ளது. காப்பாற்றுவது என் சுபாவம். என் சுபாவப்படி உன்னை காப்பாற்றுகிறேன் என்று இருக்கும் போது, பணம் எனக்கு தேவையே இல்லை" என்றார் வந்தவர். " பணம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். இந்த பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றியதால், ”நான் தான் உன்னை காப்பாற்றினேன். நான் தான் காப்பாற்றினேன். நீ எனக்கு அடிமை” என்று ஆக்கி கொண்டு விட்டால் என்ன செய்வது?” என்றான் விழுந்தவன். "வேண்டவே வேண்டாம். நீ எனக்கு அடிமையாக இருக்கவே வேண்டாம். சுதந்திரமாகவே இரு காப்பற்றுவது என் சுபாவம். நான் உன்னை காப்பாற்றாமல் விடவே மாட்டேன்" என்றார் வந்தவர்.
"நீங்கள் என்ன சொன்னாலும், எனக்கு உங்கள் மேல் சந்தேகம் வருகிறது. ஒரு வேளை என்னை தூக்கி விட்ட பிறகு, ”ஏண்டா. கவனிக்காமல் இந்த பாழுங்கிணற்றில் விழுந்தாய்?” என்று நீங்கள் அடித்துi விட்டால்? அதனால், நான் இங்கேயே இருக்கிறேன். என்னை விடுங்கள்.” என்றான் விழுந்தவன். "நான் உன்னை கரையேற்றுகிறேன் என்று ஆசையோடு வந்தும், ”பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன், பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன்” என்று இப்படி அசட்டு பிடிவாதம் செய்து கொண்டு, அடம் செய்தால் நான் என்ன தான் செய்வது?” என்றார் வந்தவர். இப்படி காப்பாற்றுபவர் வந்தும், காப்பாற்ற ஒரு பிடியாக முடிச்சுகள் உள்ள கயிறை கொடுத்தும், போட்ட கயிற்றின் மீது சந்தேகப்பட்டு கொண்டு, காப்பாற்றுபவன் மீதும் சந்தேகப்பட்டு கொண்டு, பிடிவாதம் செய்து கொண்டு பாழுங்கிணற்றிலேயே இருந்து வந்தான். அவரும் இவன் எப்பொழுதாவது தன்னை நம்புவானோ என்று அங்கேயே இருந்தார். வந்தவர் கடவுள். உங்களுடைய மனதுக்கு சரியாக பட்டால் கண்டிப்பாக உதவியை கேட்டு பெறுங்கள். எல்லோரையும் சந்தேகப்பட வேண்டாம். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...