Tuesday, December 17, 2024

STORY TALKS - EP.033 - கொடுத்ததெல்லாம் கொடுத்தான் , யாருக்காக கொடுத்தான் ?



ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனுக்கு பயங்கரமான பணக்கஷ்டம். அவனுக்கு உடனடியாக ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு தன்னுடைய முகவரியுடன் ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் பெறுநர் கடவுள் என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை அந்த நாட்டின் அதிபர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அதிபருக்கு ஒரே ஆச்சர்யம். ”சரி. இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார்.  பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷியாக இருந்தது. பதிலுக்கு நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். ”ரொம்ப நன்றி கடவுளே! நான்கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்கள். ஆனாலும். நீங்க அதிபர் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனதை நான் கவரை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த அதிபரும் வேலை பார்க்கற அதிகாரிகளும் சேர்ந்து ஆட்டைய போட்டுட்டாங்க என்று எழுதி அனுப்பினான். உண்மையில் மக்களுடைய வரி பணம் என்பதால் மக்களுக்கு பள்ளிக்கூடம் , ஆஸ்பிட்டல் , ரோடு , விவசாயம் போன்ற விஷயங்களுக்கு செலவு பண்ண அதிகாரம் தயங்க கூடாது. இதுதான் மக்களுடைய அன்பான வேண்டுகோள். இதை பண்ணவில்லை என்றால் நல்ல விஷயங்கள் செய்தாலும் குறை வைத்து செய்யும் கலாச்சாரம் உலகில் வந்துவிடும். இதனை புரிந்து நடந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் சமூகத்துக்கான உண்மையான அங்கீகாரத்தை விருப்பு வெறுப்பு இல்லாமல் கொடுக்க வேண்டும். இதனை விட்டுவிட்டு பயணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி செய்வது நன்றாகவா உள்ளது ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...