Saturday, December 14, 2024

STORY TALKS - EP.027 - இந்த கருத்துக்கள் உண்மையான வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டவை

1. நம்முடைய கருத்துக்கள் மூலமாக சேரும் கூட்டம் எப்போதுமே ரொம்ப நாளைக்கு நிலைக்காது. இதுவே நம்முடைய செயல்கள் மூலமாகவும் இந்த செயல்களுக்கு உதவி செய்ய முன்வந்தது மூலமாகவும் கிடைத்த நண்பர்களாக உருவான உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் எப்போதுமே நம்மை விட்டு போகாது. 


2. இங்கே சந்தோஷமாக வாழும் மனிதர்கள் எல்லாம் நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள். உண்மையில் சந்தோஷமாக வாழ்பவர்கள் ராஜாவாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். 


3. இங்கே காலமே அன்பு வழியை பின்பற்றுபவர்களுக்கு சப்போர்ட் பண்ணுவதே இல்லையே. இவர்களுக்கு எல்லாம் லொட்டு லொசுக்கு சொல்லிக்கொண்டு இவர்களுடைய வாழ்க்கையை இன்னுமே நாசம் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறது. இனிமேல் எல்லாம் வன்முறைதான். 


4. போலியான மனிதர்கள் கடைசி வரைக்கும் ஜெயிக்கவே மாட்டார்கள். இவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் என்பதை கொண்டே இவர்களை கண்டுபிடித்துவிடலாம். இதுவே உண்மையான மனிதர்கள் என்றால் உண்மையாக கடின உழைப்பு கொடுத்து ஜெயித்துவிடுவார்கள். உழைப்பை கொடுக்காமல் உழைப்பை கொடுத்ததாக கணக்கு காட்ட மாட்டார்கள். 


5. நம்முடைய வாழ்க்கையின் நடக்கும் சம்பவங்களில் ஒரே ஒரு சரியான விஷயத்தை கண்டுபிடித்தால் கூட இந்த விஷயத்தோடு சேர்ந்த எல்லா சரியான விஷயங்களையும் தேடி தேடி கண்டுபிடித்து செய்ய வேண்டும். இதுவே ஒரே ஒரு தப்பான விஷயத்தை கண்டுபிடித்தால் கூட இந்த தப்பான விஷயங்களுக்கு சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் கஷ்டப்பட்டு நீக்க வேண்டும். இங்கே கஷ்டப்படாமல் எதுவுமே இல்லை. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...