Tuesday, December 10, 2024

MUSIC TALKS - NEE VARUVAAI ENA NAAN IRUNDHEN - YEN MARANDHAAI ENA NAAN ARIYEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை 
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் 
எதையும் நினைக்கவில்லை வாராயோ !

அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று

இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்று
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்

அமுத நதியில் என்னை 
தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட 
இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை
விரைவில் தணிப்பதற்கு வாராயோ
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே

குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை

சிவந்த முகத்தில் ஒரு
நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் 
அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய 
கவிதை சொல்ல வாராயோ

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...