Sunday, December 1, 2024

STORY TALKS - EP.010 - கஷ்டப்பட்டு வாழ்க்கையில் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் ! [#003]



1. சரியான பாதையை சரியான திசையை தேர்ந்தடுத்து சும்மா நடந்து போனால் கூட வெற்றி கிடைத்துவிடும். தவறான பாதையை தவறான திசையை தேர்ந்தெடுத்து ஒரு பந்தைய காரில் அசுர வேகத்தில் போனாலும் கூட வெற்றி கிடைக்கவே கிடைக்காது. 

2. நம்முடைய வாழ்க்கை எப்போதுமே ஒரு சமநிலையை பொறுத்தது ஆதலால் கடினமான வேலைக்கு பின்னால் ஓய்வு எடுப்பது நல்ல விஷயம்தான். 

3. இந்த உலகத்தை ஜெயிப்பவர்கள் ஜோஸியங்களை நம்பியது இல்லை எதிர்காலத்தை கட்டுமானம் பண்ணும் திறமையில் மட்டும்தான் நம்பிக்கை வைத்து இருந்தார்கள். 

4. வெற்றிக்கான பயணம் ஒரு நெடுந்தொலைவு ஆதலால் இன்றைக்கே உங்களின் பயணத்தை தொடங்குங்கள். 

5. உங்களுடைய இலட்சியமும் கனவுகளும் கத்தரிக்கப்பட்ட காகிதத்தில் வரைந்த ஒரு புதையல் வரைபடமாக உங்களுக்குள்ளே சிதறி இருக்கிறது. இவைகளை இனம் கண்டு சேர்த்தால்தான் உண்மையான புதையலை அடைய முடியும். 

6, உண்மையான பணக்கார வாழக்கை உங்களுடைய மன நிறைவில் இருக்கிறது. இதனால்தான் குழந்தைகளுக்கு ஒரு சின்ன கார் பொம்மை கொடுத்தால் கூட சந்தோஷமாக தூங்குகிறார்கள். 

7. உங்களுடைய பணம் உங்களுக்கு விசுவாசமாக வேலை பார்க்கும் , உங்களுடைய பணம் உங்களுக்காக போர்களை வென்றெடுக்கும், பணத்தையும் சம்பாதிக்க வேண்டும், நல்ல மனிதர்களையும் சம்பாதிக்க வேண்டும். 

8. உங்களுடைய கடின உழைப்பு மேலே நம்பிக்கை வைத்தால் இந்த உலகமே ஒரு நாள் உங்களோடு சேர்ந்து வேலை பார்க்க போகிறது, இப்போது விமர்சனம் பண்ணும் ஆட்கள் உங்களுடைய வெற்றியில் தாங்கள் செய்யும் தவறை உணருவார்கள். 

9. வெற்றிக்கான பாதை ஒரு நேரக்கோடு அல்ல, வெற்றி வளைந்து வளைந்து செல்லும் சாலை என்பதால் உங்களுடைய ஞாபக சக்தி நிச்சயம் அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் வந்த பாதையை கவனித்துக்கொண்டே இருங்கள். 

10. நீங்கள் வளர்ச்சி அடைந்துகொண்டு இருக்கிறீர்கள் , தினம் தினமும் கடினமாக வேலை பார்த்து பணமும் பொருளும் ஈட்டுகிறீர்கள் என்றால் அடுத்த விஷயமாக உங்களுக்கு நீங்களே முதலீடு செய்யுங்கள். 

11. தோல்வி எப்படி உருவாகிறது என்று யோசித்து தடுத்து நிறுத்திய மனிதர்கள் மட்டுமே வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். 

12. நீங்கள் நேர்மையாக முயற்சித்து உலகம் உங்களை தள்ளிவிட்டால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தின் மேலும் போர் தொடுத்து வென்று காட்டுங்கள். உங்களின் வலியும் வேதனையும் உலகத்துக்கு புரிய வேண்டும். 

13. கீழே விழுந்தவன் ஒருபோதும் மேலே எழமாட்டான் என்று நினைக்கும் மக்களை கண்டுகொள்ள வேண்டாம், வாழ்க்கையின் வெற்றியின் அடிப்படையே விழுந்து எழுவதுதான். 

14. ஒரு முடிவு ஒரு மொத்த வாழ்க்கையே வேறு விதமாக மாற்றும் சக்தியை உடையது. எப்போதும் முடிவு எடுக்கும்போது யோசித்து எடுக்க வேண்டும். 

No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...