1. ஒரு முறை தவறு நடக்கலாம் , இரண்டு முறை தவறு நடக்கலாம் ஆனால் நீங்கள் தலைமையில் இருக்கும்போது நடக்கும் தவறுகளை உங்களால் சரிபண்ண முடியவில்லை என்றால் உங்களின் சுற்று வட்டாரத்திலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் , நீங்களும் மாற வேண்டும்.
2. உங்களுக்குள் எந்த அளவுக்கு அதிகமான பயம் இருக்கிறதோ அந்த பயத்தை அதே அளவுக்கு கோபமாக மாற்றவும் உங்களால் முடியும், இந்த நுட்பத்தை கஷ்டப்பட்டாவது கற்றுக்கொள்ளுங்கள், பயம் உங்களை பாதிக்கும் ஆனால் கோபம்தான் உங்களின் எதிரிகளை பாதிக்கும்.
3. நாம் எந்த ஒரு நல்ல விஷயம் பண்ணினாலும் அவைகளை கெட்டதாக பார்க்கவும் கேவலப்படுத்தவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். இவர்கள் பொதுவாக அறியாமையில் இருப்பார்கள் அல்லது மூளை சலவையில் இருப்பார்கள்.
4. உங்களுடைய பணத்தில் சாப்பாடு சாப்பிடாமல் உங்களுடைய பயணத்தில் அனுபவம் சேர்க்காமல் வாழ்பவர்கள் என்று நீங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கையின் 95 சதவீதத்தை பார்க்காமலே டிக்கெட் வாங்கி பரலோகம் சென்றுவிடுவீர்கள்.
5. பொழுது போக்கு விஷயங்களிலும் பயனுள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் என்று நிறைய இருக்கிறது, சரியாக வொர்க் பண்ணினால் நீங்கள் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டே பணம் சம்பாதிக்கலாம்.
6. உங்களுடைய வளர்ச்சியை தடுப்பவர்கள் உங்களின் ஜென்ம எதிரிகள் , இவர்களுக்கு அன்போ பாசமோ கருணையோ காட்ட வேண்டாம். உங்களின் வளர்ச்சி கடவுள் உங்களுக்கு கொடுக்கும் பரிசு அதனை பொறாமையாலும் சுயநலத்தாலும் ஒருவர் தடுக்கிறார் என்றால் இவர் பிசாசுக்கு சமமானவர் என்றே பொருள்.
7. ஒரு நாளுக்கு 10 பேரிடம் 1000 ரூபாய் லாபத்துக்கு ஒரு விஷயத்தை விற்பவன் நஷ்டம் ஆகிறான், ஒரு நாளுக்கு 2,00,000 பேரிடம் .50 பைசா இலாபத்துக்கு ஒரு பொருளை விற்பவன் ஜெயிக்கிறான். எத்தனை கஸ்ட்டமர்கள் என்பது முக்கியம் பொருள் வாங்கும் விற்கும் விலை நிர்ணயம் முக்கியம் அல்ல. காசு என்பது கஸ்ட்டமர் எண்ணிக்கையில் இருக்கிறது.
8. நீங்கள் மன்னிக்க முடியாத ஒரு தவறை செய்யும்போது எப்போதுமே தெரியாமல் நடந்தது போல செய்ய வேண்டாம் வேண்டுமென்றே அந்த தவறை செய்யுங்கள். தவறு செய்வது மனித இயல்பு ஆனால் இந்த தவறுகள்தான் இண்டெலிஜன்ஸ் புதைந்து இருக்கும் வாழ்க்கையின் புதையல் நிலப்பரப்பு. சரியான விஷயங்களை மட்டுமே செய்பவர்கள் கிளைமாக்ஸ்ஸில் பொதுவான விஷயங்களில் கூட கஷ்டப்படுவார்கள்.
9. ஒரு குழந்தையாக பிறக்கும்போது ஜெனட்டிக்ஸ் நாம் உயிரோடு இருக்கும் வரைக்கும் என்னென்ன பண்ணவேண்டும் என்பதை முடிவு செய்துவிடுகிறது. தங்கத்துக்கு நகை செய்வதால் வேல்யூ. ஸ்டீல்லுக்கு இயந்திரம் , கருவிகள், பொருட்கள் செய்யப்படுவதால் வேல்யூ. உங்களுடைய ஜெனட்டிக்ஸை உங்களால் மாற்ற முடியாது.
10. பணக்காரர்கள் வெற்றியாளர்கள் அல்ல , பணக்காரருக்கு வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் வெற்றியாளர்கள். சம்பளம் கொடுத்து வெற்றிகள் வாங்கப்படுகிறது. காரியங்கள் முடிக்கப்படுகிறது. நீங்கள் நம்பவில்லை என்றாலும் இதுதான் நிஜம்.
No comments:
Post a Comment