Monday, December 30, 2024

ARC-002 - வேலை பார்க்க முடிவு எடுத்துவிட்டால் !




மாவட்ட அளவிலான ஒட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதமாக தீவிர பயிற்சி எடுத்து களத்தில் ஒடுவதற்கு தயாராக இருந்தான் மணி. எப்படியாவது முதல் பரிசு வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்துது. விசில் ஊதப்பட்ட சத்தம் கேட்டவுடன் ஓடத் தொடங்கினான். அவனது கால்கள் குதிரையைப் போல பறந்தன. எல்லாரையும் முந்தி ஓடி வந்து முதல் இடத்தை பிடித்தான். பரிசு வாங்கிய கைகயோடு வீட்டிற்கு சென்றான். வயலில் உழுது கொண்டிருந்த அப்பாவை நோக்கி சென்று பரிசைக் கொடுத்தான். அவனது அப்பா மிகுந்த மகிழ்ச்சியோடு உனது விடாமுயற்சிக்கும், தொடர் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி என்று பாராட்டினார். சில மாதங்கள் கடந்தன. பொங்கல் தினத்தன்று மணியின் ஊரில் ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. ஊரார் முன்னிலையில் ஓட தொடங்கினான். ஆனால் பழைய வேகமில்லை. கால்களில் ஏதோ வலி தெரிந்தது. பரிசு பெறவே போராட வேண்டியிருந்தது. இறுதியாக மூன்றாம் பரிசு பெற்றான். தன்னால் முதல் பரிசு பெற முடியவில்லையே என்று வருத்ததோடு அப்பாவிடம் சொன்னான். அப்பா மணியின் தோள்களில் கை வைத்து ‘இந்த ஏர்கலப்பையை பார்த்தயா, இதை ஒரு வாரம் தான் பயன்படத்தவில்லை. அதற்குள் துருப்பிடித்து விட்டது. இதுபோல தான் உன்னிடம் திறமையும், ஆற்றலும் இருந்தது. ஆனால் தொடர்ந்து பயிற்சி இல்லை. அதனால் தான் உன்னால் பழைய வேகத்தில் ஓட முடியலப்பா” என்றார் அப்பா ‘வெற்றி பெற உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் துருப்பிடித்துப் போய்விடுவோம்” என்பது மணிக்கு புரிந்தது. இங்கே வேலை பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தால்தான் இளமையின் வெற்றியை முழுதாக அனுபவிக்க முடியும் என்பதை சொல்லும் இந்த இன்டர்நெட் கதை !

No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...