Tuesday, December 10, 2024

GENERAL TALKS - இந்த பதிவு கண்டிப்பாக யாருக்கும் புரியப்போவது இல்லை !

 



ஒரு காலத்தில் நான் என்னென்ன செய்து கொண்டு இருந்தேன் என்றால் எனக்கென்று என்னென்ன விஷயங்கள் தேவையோ அனைத்து விஷயங்களையும் ஒரு மிகப்பெரிய பட்டியலாக எழுதிக் கொண்டிருந்தேன் இத்தனை விஷயங்களை நான் எப்போது வேண்டுமென்றாலும் வாங்கியே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் நான் இருந்தேன். 

பெரும்பாலான நேரங்களில் என்னுடைய பட்டியல் எல்லாம் ஒரு நோட்டு புத்தகத்தை விடவும் அதிகமாக இருந்தது இருந்தாலும் எத்தனை விஷயங்கள் நமக்குத் தேவை என்பதை யோசிக்கும்போதே நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. 

ஒரு சின்ன விஷயம் எனக்கு சொல்லிக் கொடுத்தது என்னவென்றால் பணம் இருந்தால் மட்டும்தான் எதிர்காலத்தில் நாம் விருப்பப்பட்ட பொருட்களை எல்லாம் வாங்க முடியும். 

பணத்தை சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்பவர்கள் பணம் இருந்தால் மட்டும்தான் நமக்கு ஆதரவாக இன்று இருக்கக்கூடிய மனிதர்களே நாளைக்கும் நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் பணம் மட்டும் இல்லை என்றால் நாளைக்கு நம்மை எதிர்ப்பவராக மாற்றிவிடுவார்கள் என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.


பணம் உள்ள மேல் மக்கள் பணம் இல்லை என்று மட்டும் ஒரு நிலையில் சிக்கிக்கொண்டால் நம்மை சித்திரவதை செய்யத்தான் பார்ப்பார்கள். நேற்று வரை ஆதரவாக இருந்தவர்கள் இன்று சித்திரவதை செய்கிறார்களே இதுதான் வாழ்க்கையா என்று கேட்டால் உண்மையில் இதுதான் வாழ்க்கை. 

பணத்தை சம்பாதிக்க மட்டுமே தான் மனிதன் எப்போதுமே முயற்சி பண்ண வேண்டும். அதுவும் நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுது உன்னோடு என்று காதலில் எல்லாம் விழுந்துவிட்டு பின்னர் நிதானமாக பணம் சம்பாதிப்பது எல்லாம் நிச்சயமாக வேலைக்கு ஆகாது. 

சிறுக சிறுக சேமித்தவர்கள் எல்லாம் மெடிக்கல் செலவுகளில் மொத்த பணத்தையும் இழந்து காலி ஆவதே நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றாலும் மிகவும் வேகமாக சம்பாதிக்க வேண்டும் மெதுவாக சம்பாதிப்பது என்பது முட்டாள்தனம்.  முட்டாள்தனத்திலும் மிகவும் வடிகட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முட்டாள்தனம். 

பணத்தை நிர்வாகம் பண்ணி இன்னும் பணத்தை உருவாக்க மட்டும் யோசித்தால் நல்ல காசு பணம் சம்பாதிக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு என்று ஒரு பொருள் வேண்டுமென்றால் நம்மால் அந்த பொருளை வாங்க முடிய வேண்டும். அப்படி நம்மால் வாங்க முடியவில்லை என்றால் அதுவே மனதுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கி மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும். 

எந்த வகையிலான பிரச்சனை என்றால் நாம் ஒரு கடைக்கு செல்கிறோம் ஒரு நல்ல பொருளை நாம் பார்க்கிறோம். நம்ம விட பணம் இருக்க கூடிய இன்னொருவர் அந்த பொருளை வாங்குகிறார் என்று ஒரு நிலை வரும்போது நம்மால் அந்த பொருளை வாங்க முடியவில்லை என்ற மனதுடைய வருத்தம் நம்மை பாதிக்க அனுமதிக்கிறோம். 

இந்த வருத்தம் நம்மையே மனதுக்குள் ஒரு ட்ரில்லிங் மிஷினை வைத்து ஓட்டை போடுவது போல கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு துளையாக போட்டு பின்னாடியில் மனதையே மிகவும் ஓட்டை போட்ட சல்லடையை போல் மாற்றிவிடுகிறது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் பொரியல் கரண்டியைப் போல நம்முடைய மனதை வறுத்து போட்டு வைத்து விடும்‌ ஆபத்தும் இருக்கிறது.


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...