1. கடந்த காலத்தின் குறிப்பிட்ட நாளை மட்டும் மறுமுறை வாழவேண்டும் என்று நினைப்பது தவறானது. உங்களுடைய உடலையும் மனதையும் சரியாக வைத்தால் குறிப்பிட்ட நாளை விட சிறப்பான இன்னொரு நாளையும் உங்களால் உருவாக்க முடியும்.
2. இந்த உலகத்தை பற்றிய அனுபவ அறிவு இருக்கும் ஆட்களை உங்களோடு வைத்துக்கொள்வது எப்போதுமே பயனுள்ள விஷயம்.
3. பணமோ, பலமோ , ஆதரவோ உண்மையான விஷயங்களாக வளர்த்துக்கொள்ளுங்கள். போலியான விஷயங்களை வைத்து வாழவேண்டும் என்று ஆசைப்பட வேண்டாம். போலிகளை வைத்து வாழ்ந்தால் ஒரு நாளில் எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.
4. ஸ்மார்ட்டான மனிதர்கள் எப்போதுமே கொஞ்சமாகத்தான் பேசுகிறார்கள்.
5. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் அடைந்து யாருடைய ஆதரவும் தேவை இல்லை என்று ஒரு கெத்தான வாழ்க்கையை வாழ்ந்தால் அவனை பார்த்தால் எல்லோருக்கும் பயம் இருக்கும்.
6. நீங்கள் எந்த மனிதரை பெரிய மனிதராக நினைக்கிறீர்களோ அவர்கள்தான் சிறுமையாக உங்களை ஏமாற்றுவார்கள். இங்கே எல்லா மனிதரும் கெட்டவர்கள்தான்.
7. சத்தியங்களை செய்து கொடுக்கும் ஆட்களை விட செயல்களை வென்று முடிக்கும் ஆட்களையே இந்த உலகம் அதிகமாக விரும்புகிறது.
8. நாம் தாங்கும் வலியை விட நம்முடைய கஷ்டங்களை இன்னொருவர் புரிந்து கொள்ளாமல் பேசுவதுதான் இன்னும் வலிக்கிறது.
9. கடந்த காலங்களில் குழந்தை பருவ கதைகளில் அரக்கர்களை கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் தப்பான சமூகத்தின் காரணமாக நாமே வயது அதிகமாகும்போது அரக்கர்களாக மாறிவிடுகிறோம்.
10.மென்மையானவர்கள் அதிகம் காயப்படுகிறார்கள். காரணம் என்னவென்றால் இவர்கள் அன்பையும் அதிகமாக வைக்கிறார்கள். கணவுகளையும் பெரிதாக உருவாக்கிக்கொள்கிறார்கள்
11.உங்களை நேசிக்காத ஒரு மனிதர் உங்களை நேசிக்க வேண்டும் என்று போராடுவது வலி நிறைந்த ஒரு சவாலாகும் , மனித இனத்தின் எவரின் மனமும் கடலில் தொலைத்த மழைத்துளி அது உங்களை சேரும் என்று தேடுவது பயனற்றது.
12.நீங்கள் சரியாக இருந்தால் மட்டுமே அடுத்தவர்களின் குறைகளை கண்டறிந்து சொல்ல முடியும். நீங்களே சரியாக இல்லை என்றால் மற்றவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். உங்களின் கருத்துக்கும் மதிப்பு இல்லை.
13.ஒரு நாணயமான மனிதன் கண்டிப்பாக அன்புக்கும் பாசத்துக்கும் முக்கியம் கொடுக்க இயலாது. அன்பின் பாதையில் சென்றால் சரியான விஷயங்களை மட்டும் செய்து வாழ முடியாது. தவறுகளையும் தெரிந்தே செய்ய வேண்டியது இருக்கும்.
14.பகல் நேரத்து வெளிச்சத்துக்கு நான் செய்யும் செயல்கள் அனைத்தும் தெரிகிறது. இரவு நேர இருளுக்கே என்னுடைய உள்ளத்தின் எண்ணங்கள் அனைத்தும் தெரிகிறது.
15. தற்காலிகமாக கொஞ்சம் நேரத்துக்கு நீங்கள் ஒரு முக்கியமான மனிதராக இப்போது இருக்கலாம் ஆனால் நிரந்தரமாக நீங்கள் யாருக்கும் ஒரு முக்கியமான மனிதராக இருந்தே வாழ்க்கையை நகர்த்த முடியாது. ஒரு நாள் இல்லை என்றாலும் இன்னொரு நாள் உங்களின் முக்கியத்துவம் தெய்மானம் அடையத்தான் செய்கிறது.
16. ஒரு சில மனிதர்கள் காலம் படுத்தும் பாட்டில் மனிதனாக இருப்பது எப்படி என்ற அடிப்படையையே மொத்தமாக மறந்து ஒரு மாறுபாட்டான வாழ்க்கையை வாழுவார்கள்.
17.உங்களுடைய சாமர்த்தியத்தை அதிகமாக பயன்படுத்துங்கள். இதயத்தை கொஞ்சமாகவே பயன்படுத்துங்கள். இப்படி செய்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்
18.ஒரு சில நேரங்களில் உங்களுக்கு காயம் செய்தவருக்கு கொடுக்கும் இன்னொரு வாய்ப்பு உங்களை இந்த முறை இன்னும் அதிகமாக காயப்படுத்த நீங்களே கொடுக்கும் ஒரு கடப்பாரை.
19.ஜெயிப்பதற்கான போதுமான சக்திகள் இருந்தும் ஜெயிக்காமல் இருப்பது உங்களுடைய வங்கி கணக்கில் பணம் இருந்தும் பட்டினி கிடப்பதற்கு சமம்.
20. ஒரு பணக்காரன் எதுவும் புரியாமல் எவ்வளவு வேண்டும் என்றாலும் அட்வைஸ் பண்ணுவான். ஒரு பணக்காரன் புரிதல் இல்லாமல் சொல்லும் விஷயங்களை எல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. அவர்கள் சொல்வது பணக்காரராக இருப்பதால் மட்டுமே சரி என்று நம்ப கூடாது. இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.
21. ஒரு மனிதன் எப்போதுமே அவனுடைய அபிலிட்டிஸ் - அதாவது செயல் திறனை - சிறப்பு சக்தியை வளர்க்காமல் பிரச்சனையை சமாளிக்க இறங்க கூடாது. வலி மிகவும் அதிகமானதாக இருக்கும், எடுத்த செயலில் வெல்லவும் முடியாது.
No comments:
Post a Comment