இந்த உலகத்தில் பொருளாதார அளவில் ஒரு நூறு வருஷத்துக்கு தனக்கு தேவையான செல்வங்கள் மற்றும் அனைத்து விஷயங்களையும் சேர்த்து வைத்து அடிப்படை தேவைகள் அனைத்தையுமே பூர்த்தி செய்து வைத்து சந்தோஷமாக வாழக்கூடிய மக்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
அடிப்படையில் இவர்களுக்கெல்லாம் பணம் எப்படி கிடைக்கிறது என்றால் அவர்களுடைய மூதாதையர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களில் இருந்துதான் பணம் கிடைக்கிறது.
இவர்கள் அளவுக்கு நம்ம ஆளும் முன்னேற முடியுமா என்றால் நிச்சயமாக முன்னேற முடியாது நம்ம ஆளை முன்னேற தொடங்கும் ஆரம்பத்தில் இருந்தே அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள் !
நாம் இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணாலும் கூட நமக்காக எப்போதுமே எதிர்ப்பு பண்ணி நம்முடைய வாழ்க்கையை நாசம் பண்ணவே ஆட்கள் இருக்கிறார்கள் அல்லவா ? இந்த போட்டியை தவிர்க்க எப்போதுமே சக்திகளை உள்ள சக்தியாளர்கள் நம்முடைய வாழ்க்கையை நாசம் செய்துவிடுவார்கள் !
இந்த சக்தியாளர்களை காலி பண்ண வேண்டும் என்று புதுப்பேட்டை தனுஷ் போல களத்தில் இறங்கினாலும் கடைசியில் என்ன நடக்கும் என்று அந்த படத்திலேயே தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
காடுகளுடைய அழிப்பு நிறைய அரியவகை மூலிகைகளையும் தாவரங்களையும் மேலும் அரியவகை பூச்சி இனங்களையும் அறிய வகை சிறு சிறு புழுக்கள் போன்ற இனங்களையும் மொத்தமாக அழித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த மாதிரியான காடுகளின் பேரழிவை கார்பெரட் கம்பெனிகள் மிகவும் சந்தோஷமாக செய்கிறார்கள். அங்கு வாழும் ஆதிவாசிகள் மற்றும் பழகுண்டியர்களை கூட இவர்கள் கூலிப்படை வைத்து அடித்து நொறுக்கியாவது வெளியே அனுப்புகிறார்கள். இது போன்ற கம்பெனிகள் ஆதிக்கத்தை நம்மால் இன்றைய தேதிக்கு வெளியே கொண்டுவர முடியவில்லை.
மானசாட்சியற்ற கார்ப்பரேட் கம்பெனிகள் இல்லாமல் இருந்தால்தான் நம்முடைய வாழ்க்கையில் மனிதனை மனிதனாக மதிக்கும் சமுதாயத்தை உருவாக்க முடியும்
இந்த கம்பெனிகள் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மனதின் மூளையை சோப்பு தண்ணீர் போட்டு சலவை செய்து பல விஷயங்களில் இதுதான் நாம் செய்ய வேண்டும் இதைத்தான் செய்யக்கூடாது என்று இவர்களை ஒரு முடிவை எடுத்து இவர்கள் எடுக்கும் முடிவுகளையே நாமும் எடுக்க வேண்டும் சென்று சோப்பு தண்ணீர் சலவைகளை செய்து விடுகிறார்கள்.
இவர்கள் மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகிறார்கள் பிடுங்கிய பணத்தில் இருந்து கிடைத்த கட்டற்ற சக்திகளின் மூலமாக மக்களை திரும்பவும் அடித்து தாக்குகிறார்கள். இது எப்படிப்பட்டது என்றால் நாம் செய்த கத்தியை வைத்து நம்மையே நெஞ்சில் குத்துவது போல இருக்கிறதே !.
மூலிகைச் செடிகளை மொத்தமாக அழித்துவிட்டு தனியார் தயாரிப்பு மருந்துகள் என்று மண்டைக்குள் கெமிக்கல்களை நிரப்புகிறார்கள். சத்துக்கள் இருக்கக்கூடிய உணவுகளுடைய விவசாய விளைச்சலையும் மொத்தமாக அழித்துவிட்டு விவசாயிகளுடைய சாப்பாட்டில் மண்ணை அள்ளி போட்டுவிட்டு இப்போது விட்டமின் டேப்லெட்டுகளை சாப்பிடுங்கள் என்றும் சர்க்கரை இல்லாத செயற்கை இனிப்பூட்டியை சாப்பிடுங்கள் என்றும் கெமிக்கல் கெமிக்கலாக நம்முடைய தலையில் கட்டுகிறார்கள்.
இது எல்லாமே கண்டிப்பாக மோசமான ஒரு பெரிய உலக பஞ்சாயத்தைதான் கொண்டுவரப்போகிறது ! இவர்களை கண்டிப்பாக கட்டிப்போட வேண்டும் என்பதை அதிகாரம் புரிந்துகொள்ள வேண்டும் !
No comments:
Post a Comment