வாழ்க்கையில் பொறுப்பற்ற இளைஞராக வேலைக்கு சென்று சம்பாதிக்க முயற்சி எடுக்காமல் ஒரு மாதிரியான வெறுமையாகவே இருக்கக்கூடியவர் நம்முடைய கதாநாயகர். தன்னுடைய அப்பாவின் கடினமான கட்டுப்பட்டாலும் அவருடைய சுதந்திரத்தை தடுத்ததாலும் மிகவும் அதிகமாக அவரை வெறுக்கிறார் இருந்தாலும் காவல்துறையில் வேலை பார்க்கும் தன்னுடைய அப்பா ஒரு கட்டத்தில் அகால மரணம் அடையும் போது அவருக்கு அடுத்ததாக அத்தகைய குடும்ப பொறுப்புகளை எடுத்துக்கொண்டு அந்த மரணம் நடந்து வருத்தம் கொணடு இருக்கிறார் என்ற கட்டத்தில் இவருக்கு போலீஸ் வேலை கிடைத்து அடுத்தடுத்த விஷயங்களை செய்து கொண்டு இருப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல் பாகம் சராசரியான ரொமாண்டிக் காமெடி படங்களின் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி கொண்டிருந்தாலும் இரண்டாவது பாகம் தெளிவான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இல்லாமல் போனதும் இந்த படத்துக்கு ஒரு போதுமான தீம் அமையாமல் இருப்பதாக இருக்கிறது ஆனால் மற்ற படங்களில் இருந்து இந்த படத்தை நன்றாகவே வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள் மேலும் இந்த படத்தின் இசை மிகவும் தெளிவாக உள்ளது குறிப்பாக பேசாதே என்ற பாடலை நீங்கள் அடிக்கடி நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம் கேட்க கூடிய ரகத்தில் உள்ளது இந்த படத்தில் தினேஷ் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்பதை மறுக்க முடியாது. கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து படத்துக்கு தேவையாக நிறைய விஷயங்களை சேர்த்து குறைத்து இருக்கலாம் என்று நினைத்தாலும் இயக்குனர் கதையின் எதார்த்தமான டார்க் காமெடியோடு கூடிய ஸ்கிரீன்பிளே கொடுத்து ஒரு புதுமையை உருவாக்குவதில் சாதித்து இருக்கிறார். இந்த திரைக்கதைக்கான வொர்க் இந்த படத்தை சிறப்பான உருவாக்கம் என்று நிரூபணம் செய்கிறது. பேசாதே பார்வைகள் வீசாதே பாடல் ஒரு ஜெனரல் டிராமா திரைக்கதையில் ஒரு ப்ரிமியம் போனஸ். இசையும் பாடல்களும் இந்த கதைக்கு இம்போர்ட்டன்ஸ் ஒரு அளவுக்குதான் கொடுத்து இருக்கிறது. எடிட்டிங்கில் நிறைய வொர்க் செய்து இருந்தால் இந்த படம் இன்னும் அதிக பொட்டேன்ஷியலை பெற்று இருக்கும் என்பது வலைப்பூவின் கருத்து.
No comments:
Post a Comment