முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
எந்நாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா
உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உந்தன் குட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
எனக்கிருக்கும் சக்தி பரா சக்தி புரிஞ்சுக்கோ
கால் கொலுசு தான் கல கலக்குது
கால் கொலுசு தான் கல கலக்குது
கையின் வளையல் காது குளிர கானம் பாட
போட்டிருக்கும் கோஷா வேஷம் பேஷா பொருந்துதே
பெண் அழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே
வெண்ணிலாவின் தேகம் மூடும் மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும்
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும்
இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி !!!
1 கருத்து:
நீ பாதி நான் பாதி" என்ற வரிகள் காதலை மட்டும் சொல்லல... ஒருவரின் உயிரோடு மற்றொருவர் கலந்து வாழும் பந்தத்தை உணர்த்தியது.80s தமிழ் சினிமாவின் அந்த மென்மையான காதல், மழை நனைந்த நினைவுகள், WALKMANN-ல் ஒலித்த இளையராஜா இசை, இரவு நேர அமைதியில் மனசை வருடிய வரிகள் எல்லாமே இன்னும் உயிரோடிருக்கிறது. * கேளடி கண்மணி* படத்தின் இந்த தருணங்கள் காதலைக் காட்டவில்லை... காதலாகவே வாழ்ந்தது. பழைய பாடல்களுக்கு ஒரு தனி வாசனை இருக்கும்; கேட்கும் ஒவ்வொரு முறையும் நம்ம வாழ்க்கையின் மறந்துபோன நினைவுகளை திரும்ப கொண்டு வரும்...✨️✨️✨️
கருத்துரையிடுக