கோடைக்கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே புது சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக நம் உறவுகளை வந்து கூடாதோ ?திருநாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலை பூக்களே புது சோலை பூக்களே
.ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
வெண்மலை அருவி பன்னீர் தூவி பொன்மலை அழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலை பூக்களே புது சோலை பூக்களே
No comments:
Post a Comment