திங்கள், 25 நவம்பர், 2024

MUSIC TALKS - SOLLIVIDU VELLI NILAVE SOLLAVANDHA SEITHIKALAIYE - URAVUKAL KASANTHATHAMMA KANAVUGAL KALAINDHATHAMMA - TAMIL SONG LYRICS !



சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் கலைந்துபோன பின்
நானே என்னை தேற்றினேன்

உன்னை ஒரு போதும் 
உள்ளம் மறவாது
நான் தான் வாழ்ந்தேன்..

குற்றம் புரியாது
துன்பக்கடல் மீது
ஏன் நான் வீழ்ந்தேன் ?

அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை

காலங்கள்தான்
போன பின்னும்
காயங்கள் ஆறவில்லை
வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ?
கனவுகள் கலைந்திடுமா ?

தொட்ட குறையாவும்
விட்ட குறையாகும்
வேண்டாம் காதல்..

எந்தன் வழி வேறு
உந்தன் வழி வேறு
ஏனோ கூடல்

உன்னுடைய வரவை எண்ணி
உள்ளவரை காத்திருப்பேன்
என்னைவிட்டு விலகிச் சென்றால்
மறுபடித் தீ குளிப்பேன்

நான் விரும்பும் காதலனே
நீ என்னை ஏற்றுக் கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்






1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இதுவும் நல்ல பாட்டு.

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...