Friday, November 29, 2024

STORY TALKS - EP.003 - வரலாறு - ஒரு புதுமையான திரைப்படம் ! (VARALAARU - TAMIL REVIEW - திரை விமர்சனம்)



இந்த வலைப்பூவில் இவ்வளவு சினிமா விமர்சனம் பதிவிட்டாலும் காட்ஃப்பாதர் திரைப்படத்தை பற்றி பதிவிடாமல் இருந்தால் எப்படி ! சமீபத்தில் வரலாறு திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் திரைக்கதை சிறப்பாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த GOAT படம் கூட இந்த படத்தில் இருந்து இன்ஸ்பிரேஷன் செய்ததுதான் என்று சொல்லாம். கடந்த காலத்தில் நடன கலைஞராக இருக்கும் சிவ சங்கர் ஒரு மிகப்பெரிய தவறை செய்கிறார், இந்த தவறு செய்ததால் உருவாகும் விளைவு பின்னாட்களில் அவருடைய குடும்பத்தை எப்படி பாதிக்கிறது. அவருடைய மகன் விஷ்ணுவை எப்படி நுணுக்கமாக இன்னொரு மகன் ஜீவா பிரச்சனையில் மாட்டிவிடுகிறார். நடக்கும் குழப்பங்களில் இருந்து எப்படி சிவசங்கர் அவருடைய குடும்பத்தை காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை ! படம் விசுவலாக பார்க்க பிரமாதமாக உள்ளது. நகைச்சுவைக்காக சொல்லப்படும் அடல்ட் காமெடிகள் முதல் படத்தில் அங்கே அங்கே லைட்டாக தூவப்பட்ட கிளாமர் காட்சிகள் வரை திரைக்கதைக்கு நல்ல பக்க பலம். இருந்தாலும் குழந்தைகளுடன் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். சென்ஸாரில் தூக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருந்தாலும் இந்த காட்சிகளை சேர்த்ததால்தான் கதையின் ஆழத்தை சொல்ல முடியும் என்பதை கண்டிப்பாக மெச்சூரிட்டி நிறைந்த ஆடியன்ஸ் புரிந்துகொள்வார்கள், கேரியரில் ஒரு முக்கியமான கேரக்ட்டர் இந்த வரலாறு திரைப்படத்தின் சிவசங்கர் கேரக்ட்டர் ! காமெடிகள் பிரமாதமாக வொர்க் அவுட் ஆனாலும் கதை மெல்ல நகர நகர கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை வெளியே கொண்டுவந்து கிளைமாக்ஸ் காட்சி வரை செல்லும் வரைக்கும் ரகுமான் ஒரு ஸ்பெஷல் ஸ்கோர் கொடுத்து சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கிளைமாக்ஸ் கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மெண்ட் ஆனால் கதைக்கு இந்த கிளைமாக்ஸ் தேவைப்படுகிறது ! 

No comments:

Post a Comment

STORY TALKS - EP.011 - கஷ்டப்பட்டு வாழ்க்கையில் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் ! [#004]

1. உங்களுடைய சந்தேகத்தை தூக்கி எறிந்தால்தான் நெடு நேரம் ஒரே விஷயத்தில் வேலை பார்த்து வெற்றி அடைய முடியும். உங்களுடைய சாக்கு போக்குகளை தூக்கி...