Sunday, November 3, 2024

GENERAL TALKS - அலுவலக அரசியல் ஜோக்குகள் - விசுவாசம் வேலைக்கு ஆகாது !





ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.  சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவை தொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான். இந்த கதையுடைய நீதியாக சொல்லப்படுவது என்னவென்றால் ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதை மட்டும்தான் செய்யனும். அதனை விட்டுவிட்டு நல்லதே பண்ண ஆசைப்பட்டாலும் சில கூமுட்டைகளுக்கு புரியாது,

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத் தொழிலாளி, கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால் தான் கழுதை கத்தியது எனப் புரிந்துக்கொண்டான். அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான். நாய் செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல் சுமத்தப்பட்டது. நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப் போன கழுதை இப்போது வேறு வேலைக்கு ரேஸ்யூம் அனுப்பிகிட்டிருக்கு.இந்த ஜோக்கின் கருத்து ஒரு முறை சப்போர்ட் பண்ணிவிட்டார்கள் என்பதற்காக நம்மிடம் நல்ல விதமாக நடந்துகொள்வார்கள் என்று கனவில் கூட யோசிக்க கூடாது !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...