Wednesday, November 20, 2024

MUSIC TALKS - KONJI KONJI ALAIGAL ODA - KODAI THENDRAL MALARGAL AADA - KAATRILE PARAVUM OLIGAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட 
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே 
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

மாங்குயில் கூவுது 
மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது
வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட

ஆலம் விழுது ஆட 
அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ஸ்வரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது 
காதல் கீதங்களே

மாதவன் பூங்குழல்
மந்திர கீதத்தில் 
மாதர் தம்மை மறந்தாட 
ஆதவன் கரங்களின் 
ஆதரவால் பொன்னே 
ஆற்றில் பொன்போல் 
அலையாட

காலை பனியில் ரோஜா 
புது கவிதை பாடி ஆட 
இயற்கையின் அதிசயம்
வானவில் ஓவியம்
எங்கெங்கும் பாடுது 
காதல் கீதங்களே


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...