Thursday, November 7, 2024

GENERAL TALKS - வலைப்பூ ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் !



இந்த உலகத்துடைய சுத்தமும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது. பொதுவாக இந்த உலகத்தில் மட்கும் குப்பைகள் என்ற வகையில் நிறைய குப்பைகளை கொடுத்தாலும் உலகத்தை மாசுபடுத்தாமல் இயற்கையான முறையில் குப்பைகள் மட்கிப்போய்விடுகின்றன !!

இந்த வகையில் மட்கும் குப்பைகளாக கிட்டத்தட்ட ஒரு 60 முதல் 70% வரைக்கும் குப்பைகள் தானாகவே அழிந்து விடுகின்றன. இங்கே மக்காத குப்பையாக இருக்கும் 30% தான் மாசு இல்லாமல் அழிக்க முடியாத குப்பைகளாக இன்னும் இன்னும் நிலம் , கடல் , காற்று மாசுபாடுகளை உருவாக்கி தொந்தரவுகளை செய்து கொண்டே இருக்கின்றன. 

கிளைமேட்டில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் இதனால் மட்டும்தான் உருவாகிறதா ? இது பற்றி பேசவேண்டும் என்றால் ஒரு பெரிய டாபிக் - இதுக்காகவே ஒரு பிராபரான ரிசர்ச் கொடுத்து இந்த வலைப்பூவில் நான் தனியாக ஒரு பதிவிடுகிறேன் 

ஜெனரலாக இந்த வலைப்பூவில் கேட்டுக் கொள்ளும் ரிக்வெஸ்ட் என்னவென்றால் குப்பைகளை மிகவும் சரியாக பராமரிக்க வேண்டிய கட்டாயங்கள் உள்ளது. குப்பையை சிறப்பான முறையில் மறுசுழற்சி பண்ணுவதை நான் பண்ணுவேன் பண்ணாமலும் இருப்பேன் என்று அடம் புடிக்காமல் கண்டிப்பாக நீங்கள் பண்ணியே ஆகவேண்டும் !

மேலும் குப்பைகளை நீங்கள் இஷ்டத்துக்கு தரையில் தூக்கி போடுவதால் உலக வெப்பநிலை உயரும்போது நீங்களும் ஒரு பகுதிதான் என்பதை புரிந்துகொண்டு சரியான முறையில் குப்பைகளை வெளியேற்றம் மற்றும் அழிப்பு செய்யுங்கள். 

சிறிய அளவில் நடக்கக்கூடிய இந்த பெர்ஸனல் மேனேஜ்மென்ட் தான் பின்னாட்களில் ஒரு ஊருடைய மேனேஜ்மென்டாக ஒரு மாவட்டத்துடைய மேனேஜ்மெண்டாக உருவாகும். 

நாம் செய்ய வேண்டிய சாதனை என்னவென்றால் இதுதான் இந்த மட்காத குப்பைகளை மட்டும் வெளியேற்றி பொல்யூஷன் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும். இது இம்பாஸிபில் ஆன விஷயம் இல்லை. நிறைய பேர் இணைந்தால் இந்த சாதனையை சாதித்துவிடலாம் ! 




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...