இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி சொல்லடி
முன்போல நான் இல்லை
முன்போல நான் இல்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி ? ஏனடி ?
நானும் நீயும்
ஏனோ இன்னும்
நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்
தூரம் என்ற சொல்லை
தூக்கில் போட்டு கொல்ல
நீ வாராய்
புரையேறும் போதெல்லாம்
தனியாக சிரிக்கின்றேன்
அது ஏனடி ?
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடா சொல்லடா
முன்போல நான் இல்லை
முகம் கூட எனதில்லை
ஏனடா ? ஏனடா ?
உன்னது கன்னத்தின்
உன்னது கன்னத்தின்
குழியினில் கட்டி போட்டேனா
படுத்து கொள்ள விரும்பியதும்
சிரித்தாய்
நான் விழுந்தேன்
கையில் கடிகாரம் இருந்த போதும்
கையில் கடிகாரம் இருந்த போதும்
என்னை மணி கேட்டதில்
அட நான் விழுந்தேன்
ஒரு வார்த்தை பேசாமல்
ஒரு வார்த்தை பேசாமல்
புருவத்தை நீ தூக்கி
ஒரு பார்வை பார்த்தாயே
அதில் தானே நான் விழுந்தேன்
என் பிறந்தநாள் வாழ்த்தை
என் பிறந்தநாள் வாழ்த்தை
சொல்லவே நீயும்
நள்ளிரவில் பரிசோடு
சுவரேறி குதித்தாயே
அப்போது நான் விழுந்தேன்
எப்போது நினைத்தாலும்
இப்போது போல் தோன்றும்
சுவரேறி குதித்தாயே
அப்போது நான் விழுந்தேன்
எப்போது நினைத்தாலும்
இப்போது போல் தோன்றும்
அன்பே
X
எங்கும் போகாமல்
X
எங்கும் போகாமல்
மனிதர்கள் முகத்தை பாராமல்
வருடம் முழுதும் விடுமுறை
வருடம் முழுதும் விடுமுறை
என எண்ணி கொள்வோமா
போதும் போதாத ஆடை
போதும் போதாத ஆடை
நீ அணிய பார்த்தும் பாராதவன்
போல் ரசிப்பேன்
பசித்தாலும் உண்ணாமல்
பசித்தாலும் உண்ணாமல்
தொலைபேசி மணி ஓசை
அழைத்தாலும் நகராமல்
சோம்பேறி போல் ஆவோம்
சில நாட்கள் வாழ்வோமா ?
தினம்தோறும் சில ஊடல்
சில நாட்கள் வாழ்வோமா ?
தினம்தோறும் சில ஊடல்
தித்திக்கும் ஒரு தேடல் நிகழும் !
No comments:
Post a Comment