Wednesday, November 20, 2024

MUSIC TALKS - CHITHAGATHI POOKALE SUTHI VARA PAAKUTHE ATHI MARA THOPPILE OTHIGAIYAI KETKUTHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே 
அத்தி மர தோப்பிலே 
ஒத்திகைய கேட்குதே
அத்தை மகனே அத்தை மகனே
சொத்து சுகம் யாவும் நீதான் 

சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே 
அத்தி மர தோப்பிலே 
ஒத்திகைய கேட்குதே
அத்தை மகளே அத்தை மகளே
சொத்து சுகம் யாவும் நீதான் 

நாள் பார்த்து பார்த்து
ஆளான நாத்து 
தோள் சேரத்தானே 
வீசும் பூங்காத்து

ஆனந்த கூத்து
நான் ஆட பாத்து 
பூவோரம் தானே 
ஊறும் தேனூத்து

நான் மாலை சூட
நாள் பாரய்யா 
ஆதாரம் நீதான் 
வேறாரய்யா

பட்டி தொட்டி மேளம் 
கொட்டி முழங்க
தொட்டு விட நாணம்
விட்டு விலக
திட்டமிட்டு வாழ
வாரேன் மாமா 
சட்டம் ஒன்னு போடேன் 

பூந்தேரில் ஏறி 
ஏழேழு லோகம் 
ஊர்கோலமாக 
நாமும் போவோமா

பாரெல்லாம் ஜோடி
நாம் என்றும் பாடி 
ஊராரும் நாளும் வாழ்த்த 
நாமும் வாழ்வோமா

நீரின்றி வாழும்
மீன் ஏதம்மா 
நீ இன்றி நானும் 
வீண் தானம்மா

பட்டு உடல் மீட்டு
தொட்டு அணைக்க 
தொட்டில் ஒன்னு 
ஆட முத்து பிறக்க

கட்டில் அறை பாடம்
தாரேன் மானே 
கட்டளைய போடு 




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...