Monday, November 4, 2024

CINEMA TALKS - KALKI 2898 AD - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REG-00001]




இந்த சினிமா திரைக்கதை எழுதம்போது கவனம் மிக அதிகமாக தெளிவான கதையை கொடுக்க வேண்டும் என்பதில் இருக்க வேண்டும். இங்கே எப்போதுமே பிரமாதமான நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கண்களை பறிக்கும் விசுவல் எஃபக்ட்ஸ் மறுபக்கம் இருந்தாலும் சிறப்பான கதையின் வேகம் மற்றும் தெளிவான காட்சிகள் என்று இல்லை என்றால் படத்துக்கு நம்பி வரக்கூடிய ஆடியன்ஸ் டிஸப்பாயிண்ட்மேன்ட் அடைந்துதான் விடுவார்கள் என்பதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணம் இந்த படம். கல்கி 2898 - ஸென்டிமேன்ட்களை வைத்து மார்க்கெட் பண்ணியது ஒரு பக்கம் இருந்தாலும் படம் நன்றாக என்டர்டேன்மேன்ட்டாகவே இருந்தது. ஹீரோவுக்கு மட்டுமே மாஸ் காட்ட வேண்டும் என்று எண்ணாமல் சின்ன சின்ன கேரக்ட்டர்களுக்கு கூட நல்ல கேரக்ட்டர் டெவலப்மேன்ட் கொடுக்க முயற்சி பண்ணுகிறார்கள். இந்த உலகம் முட்டாள்தானமாக போர்களும் கொடிய வியாபார ஆசாமிகளும் நிறைந்து அழிந்த பின்னால் மிஞ்சிய ஆட்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து ஆண்டவர் வருவார் என்று ஒரு வரியை கதையாக கொண்டு கிளைமாக்ஸ் வரையில் பிரபாஸை வில்லனாக காட்டிவிட்டார்கள். பிரபாஸ் காட்டிக்கொடுக்கவில்லை என்றால் எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கலாம். இந்த படம் THE DIVERGENT SERIES - ALLEGIANT படத்தை நினைவு படுத்தி இருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் நன்றாக இருந்தாலும் எண்டர்டெயின்மெண்ட் வேல்யூ நன்றாக இருந்தாலும் கிளைமாக்ஸ் மற்றும் கமல் ஹாசன் நடித்துள்ள அந்த யாஸ்கின் கேரக்ட்டருக்கு போதுமான சப்போர்ட் கொடுக்காததால் கதை பாதியில் அம்போவென்று விடப்பட்டதாக தெரிகிறது. இந்த படம் ஹிட் ஆனாலும் அடுத்த பாகம் வெளிவர வாய்ப்பு இல்லை. அப்படி வெளிவந்தால் இன்னுமே நன்றாக வொர்க் பண்ண வேண்டும். கதையில் இன்னும் தெளிவாக எடிட்டிங் பண்ண வேண்டும். பெரிய பட்ஜெட் ஷாட் என்பதால் ஃபைனல் கட்டில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு INDIAN 2 படம் அனுபவித்த விஷயங்களை இந்த படம் அனுபவிக்க வேண்டுமா ? அடுத்த பாகத்தில் நன்றாக வொர்க் பண்ணுங்கள் !! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...