Saturday, November 2, 2024

CINEMA TALKS - DUE DATE (2010) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




இங்கே எல்லோருக்குமே தொல்லை கொடுக்கவே விஷமத்தனமான நண்பர்கள் கொஞ்சம் பேர் இருப்பார்கள். இவர்கள் நம்மோடு நண்பென்டா என்று சுற்றிவிட்டு  கடைசியில் "அவன்தான்டா அன்னைக்கு பெரிய வேலையா பாரத்துவுட்டு போய்ட்டான்" என்று சொல்லும் அளவுக்கு பெரிய பஞ்சாயத்தில் மாட்டிக்கொள்ள வைப்பார்களே அப்படிப்பட்ட நண்பர்களை உங்களுக்கு  நினைவுபடுத்தும் படம்தான் இந்த ட்யூ டேட் ! ஒரு பிஸியான ஆர்க்கிடக்ட்டாக வேலை பார்த்து கடல் தாண்டி இருக்கும் நாட்டில் மனைவியை பிரிந்து இருக்கும் கணவராக இருக்கிறார் பீட்டர் ஹைமேன் , இவருக்கு ஏர்போர்ட்டில் நண்பராக கிடைக்கும் ஈதன் சேஸ் இவருடைய வாழ்க்கையை எந்த அளவுக்கு ரிஸ்க்கில் வைக்க முடியுமோ அந்த அளவுக்கு ரிஸ்க்கில் வைத்து சோதனை மேல் சோதனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். கிட்டதட்ட உயிர் போய் உயிர் வரும் ஆபத்துக்களை ஈதன்னுக்கு உதவி பண்ணிய பாவத்துக்காக பீட்டர் சந்தித்து கடைசியில் தன்னுடைய மனைவியின் பிரசவத்துக்கு அங்கே ஹாஸ்ப்பிட்டல் போய் சேர்ந்தாரா என்பதுதான் படத்தின் கதை. டாட் பிலிப்ஸ் அவருடைய HANG OVER படங்களை போலவே ஒரு ரசிக்கும்படியான அடல்ட் காமெடியை கொடுத்து இருக்கிறார். வசனங்களும் திரைக்கதையும் படத்துக்கு பக்கபலம். குறிப்பாக ஒரு சேசிங் காட்சி பிரமாதமாக படம் எடுக்கப்பட்டு உள்ளது ஆக்ஷன் படங்களின் லெவல்க்கு அந்த சேசிங் காட்சி இருக்கிறது. பேசிக்காக இரண்டு நடிப்பு லேஜேன்ட்கள் இணைந்து ஒரு சிறப்பான காமெடி டிராவெல் படத்தை கொடுத்து இருக்கிறார்கள். கண்டிப்பாக பாராட்டுக்கு தகுந்த ஒரு படமாகத்தான் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது. வாழ்க்கையில் அட்வென்சர் பிரியராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள். மது பிரியராக இருந்தால் HANG OVER படத்தை பாருங்கள். நரிக்கூட்டத்துடன் இணைந்துவிடுங்கள். மொத்தத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் என்று இல்லாமல் நல்ல எழுத்து திறன் இருப்பதால் இந்த படம் சுவாரஸ்யமான ஒரு படைப்பாக இருக்கிறது. 

No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...