Monday, November 11, 2024

CINEMA TALKS - TAMIL MOVIE "RHYTHM" - ORU DEEP ANALYSIS ! - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


கமர்ஷியல் படங்கள் மட்டும்தான் பாக்ஸ் ஆபீஸ்ஸில் களைகட்டும் என்று ஒரு காலம் இருந்தபோது  செப்டம்பர் 15, 2000 தேதியன்று இயக்குனர் வசந்த் இயக்கத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டது. அர்ஜூன் மற்றும் மீனா நடித்து வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் வேற லெவல்லில் ஒரு கம்பொஸிஷன் கொடுத்து சினிமாவின் தரத்தை சிறப்பாக உயர்த்தி காட்சிகளுக்கு உயிர் கொடுத்தது போல ஒரு மியூசிக் ஸ்கோர் கொடுத்து இருப்பார் !

நதியே நதியே காதல் நதியே - நீர் !
காற்றே என் வாசல் வந்தாய் - காற்று !
நிலமே பொறு நிலமே - நிலம் !
கல கலவென பொழியும் பொழியும் மேகம் - ஆகாயம் ! 
ஐயோ பத்திக்கிச்சு ஹோ பெண்ணே ! - நெருப்பு !

என்று நேச்சுரல் எலிமேன்ட்ஸ்க்கு பாடல் வரிகளில் க்ரேடிட்ஸ் கொடுக்க ஒளிப்பதிவாளர் வினோத் காட்சிகளை தெளிவாக எடுத்து படத்தை தரமாக காட்டி இருப்பார் 

போட்டோ-எடிட்டராக பணிபுரியும் கார்த்திகேயனும் ஒரு வங்கி அஸிஸ்டன்ட்டாக பணிபுரியும் சித்ராவும் ஒரு கட்டத்தில் சந்தித்து தமது கடந்தகால வாழ்க்கையில் நேசித்த வாழ்க்கை துணையை மரணத்தால் இழந்ததால் இன்னொரு புதிய வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கும்பொது அந்த காதலும் அதனால் உண்டாகும் வலிகளும் ரொமான்ஸ்களும் என்று ஒரு ஹாலிவுட் படம் லெவல்க்கு திரைக்கதை கொடுத்தால் தரமான விமர்சனங்கள் மற்றும் காட்சி அமைப்புக்காக பாராட்டப்பட்ட இந்த படம் வெளியான போது விமர்சகர்களிடமிருந்து நேர்மையான கருத்துக்களை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாய் உள்ளது. மேலும் சிறப்பான இசையும் சரியான கதைப்பதிப்பும் இன்று வரை ஆவலோடு பாராட்டப்படுகின்றன.



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...