இந்த வாழ்க்கையை நிறைய நேரங்களில் நம்மை ஒரு மாதிரியான கடினமான பிரச்சனைகளுக்குள்ளே மாடிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. உதாரணத்துக்கு உயிரையே கொடுத்தாலும் சரி பண்ண முடியாத அளவுக்கு கடினமான பிரச்சனையாக ஃபைனான்ஸ் கடன்களும் வட்டிக்கு விடும் ஆட்களும் என்று மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் நாட்களில் கொஞ்சம் கூட சப்போர்ட் கொடுக்காமல் கையை கழுவி விட்டு விடுகிறது.
இந்த மாதிரியான விஷயங்களின்போது பிரபஞ்சத்தின் சக்தியாளரிடம் இருந்து ஒரு நல்ல வகையான உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம் ஆனால் சக்தியாளர் இதுபோன்ற விஷயம் என்றால் மட்டும் நம்மை தன்னந்தனையாக விட்டு விடுகிறார்.
இந்தப் பிரச்சனைக்காக நிரந்தர தீர்வு எப்போதுதான் கிடைக்கும் ? பூமியை பயன்படுத்தினால் இந்த உலகத்துக்கே இருபது இலட்சம் ஆண்டுகள் வரைக்கும் சாப்பாடு போடும் அளவுக்கு விவசாய நிலங்கள் இருக்கிறது. இப்போது சமுதாயத்தை பார்க்கும்போது நேர்மையான விவசாயத்தில் புதுமையான பயிர் அறிவியல் மற்றும் வேளாண்மை தொழில்நுட்பம் என்று முன்னேற்றங்கள் நம் கண்கூடாக தெரிகிறது.
விவசாயத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. முறையாக டெவலப்மெண்ட் இருக்கக்கூடிய எந்தவிதமான அமைப்பாக இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது. போதுமான விஷயங்களை குறிப்பாக (ஆராய்தல் மற்றும் மேம்படுத்துதல்) ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் கொடுக்கும் அமைப்புகள் அசுர வளர்ச்சி அடைகின்றன. இவை இல்லாத அமைப்புகள் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கின்றன.
பெரும்பாலான நேரங்களில் கடந்த காலத்தை கடந்த காலத்தோடு விட்டுவிட வேண்டும் என்ற கருத்துதான் மக்கள் இந்த மாதிரியான நேரங்களில் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்து. இந்த உலகத்தை ஆளவேண்டும் என்று முட்டாள்களை ஆட்சிக்கு வைப்பது அவர்களுடைய ஆணவத்துக்கு தீனியை போடுமே தவிர்த்து பொதுமக்களுக்கு நன்மையை வாரி வழங்கும் என்றெல்லாம் நினைக்க கூடாது. பழைய தலைமுறை என்னதான் பிரிவினையும் பிற்போக்கும் என்று இருந்தாலும் புதிய தலைமுறை மக்களிடம் முன்னேற்றத்துக்கான எண்ணங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இவர்களுடைய டேக் இட் ஈஸி என்ற பாலிசி மட்டும்தான் வெற்றி அடைகிறது.
இதனை ஒரு வகையில் நல்லது என்று எடுத்துக்கொள்ளலாம். நாம் கடந்த காலத்தை பற்றி பெரிதாக நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால் இங்கே எந்த விதமான மாற்றமும் பெரிதாக நடந்து விடவும் போவதில்லை. கடிகாரத்தின் முன் முன்னோக்கி நகர்ந்து விட்டது என்பது போல காலண்டரின் தேதிகள் கிழிக்கப்பட்டு விட்டன என்பது போல கடந்த காலம் என்பது எப்போதோ கடந்து சென்று விட்டது என்ற ஒரு விஷயத்தை மட்டும் தான் நம்முடைய மனதுக்குள் கெட்டியாக பதிவு பண்ணிக் கொள்ள வேண்டும்.
நமக்கு இதுவரையில் சப்போர்ட் பண்ணாத நம்முடைய கடந்த காலம் போனால் போகட்டும் நாம் போதுமான போராட்டங்களை செய்து நம்முடையை எதிர்காலத்தை நம்முடைய உள்ளங்கைகளுக்குள் எடுத்துக் கொள்வோம் மேலும் நமக்கு நடக்கும் கெட்ட விஷயங்களை கூட நேருக்கு நேராக மோதி நம்முடைய சாதகமாக மாற்றிக் கொள்ளவும் முடியும். இவை எல்லாவற்றையும் சாதிக்க இங்கே நாம் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மட்டும்தான் இதனைத் தவிர்த்து வேறு எந்த துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை கவனத்தை செலுத்தி சரியான வேலைகளை செய்து பணத்தை உருவாக்கினால பின் நாட்களில் வெற்றி நமக்கே வீடு தேடி போஸ்ட் லெட்டர் போல வந்துவிடும்
.
No comments:
Post a Comment