Tuesday, November 5, 2024

MUSIC TALKS - IRAVA PAGALA KULIRA VEYILA ENNAI ONDRUM SEIYADHADI - KADALA PUYALA IDIYA MAZHAIYA ENNAI ONDRUM SEIYADHADI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



இரவா 
பகலா 
குளிரா 
வெயிலா 
என்னை ஒன்றும் செய்யாதடி

கடலா 
புயலா 
இடியா 
மழையா 
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் 
மௌனம் மட்டும் 
ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி 
காதல் இது தானா

சிந்தும் மணி போலே 
சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து 
கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் 
பெண்ணின் மனதும் 
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே 
காதல் நிஜம்தானா

என்னை தொடும் தென்றல் 
உன்னை தொடவில்லையா
என்னை சுடும் காதல் 
உன்னை சுடவில்லையா
என்னில் விழும் மழை 
உன்னில் விழவில்லையா
என்னில் எழும் மின்னல் 
உன்னில் எழவில்லையா

முகத்திற்கு கண்கள் இரண்டு 
முத்ததிற்கு இதழ்கள் இரண்டு 
காதலுக்கு நெஞ்சம் இரண்டு 
இப்போது ஒன்று இங்கு இல்லையே

தனிமையிலே தனிமையிலே 
துடிப்பது எதுவரை 
சொல்லு வெளியே

தனிமையிலே தனிமையிலே 
துடிப்பது எதுவரை
சொல்லு வெளியே

இரவா 
பகலா 
குளிரா 
வெயிலா 
என்னை ஒன்றும் செய்யாதடி

கடலா 
புயலா 
இடியா 
மழையா 
என்னை ஒன்றும் செய்யாதடி

வானவிலில் வானவிலில் 
வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் 
தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் 
வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது 
இன்று எனக்கு

மழையினில் மேகம் தூங்க 
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன் 
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் 
சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே 
என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் 
அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுள்ளே 
அள்ளி அணைப்பேன்

இரவா பகலா 
குளிரா வெயிலா 
நம்மை ஒன்றும் 
செய்யாது இனி 

கடலா புயலா 
இடியா மழையா 
நம்மை ஒன்றும் 
செய்யாது இனி 




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...