Wednesday, November 13, 2024

MUSIC TALKS - VAANAM MELLA KEEL IRANGI MANNIL VANDHAADUTHE - THOORAL THANDHA VAASAM ENGUM VEESUDHINGE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




வானம் மெல்ல கீழறங்கி 
மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் 
எங்கும் வீசுதிங்கே

வாசம் சொன்ன பாஷை 
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் 
வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே 
வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு 
உயிரிலே இணையும் 
தருணம் தருணம்

வானம் மெல்ல கீழறங்கி 
மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் 
எங்கும் வீசுதிங்கே

வாசம் சொன்ன பாஷை 
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் 
வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது 
அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி
நெஞ்சில் கேட்குதே 
உள்ளம் துள்ளி ஓடி நீ 
வந்து போன காலடி

கேட்காமல் கேட்பதென்ன 
உன் வார்த்தை உன் பார்வை தானே
 என் பாதை நாளும் தேடும் உன் பாதம்
என் ஆசை என்ன என்ன 
நீ பேசி நான் கேட்க வேண்டும்
இங்கேய என் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்து காவல் காப்பேனே


பாதி வயதிலே தொலைந்த 
கதைகள் தோன்றுது
மீண்டும் பேசி இணையுது
பாதை மாறியே பாதம் 
நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை 
உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே
நில்லாமல் ஓடி ஓடி 
நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்
உன்னை பார்க்கத்தானடி
வாழும் காலம் யாவும் 
உன்னை பார்க்க இந்த கண்கள் 
போதாதே


No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...