Sunday, November 3, 2024

MUSIC TALKS - THOTTU THOTTU THOTTU SELLUM ICE-KAATRILE SUDA SUDA AASAI NANAIGIRATHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !






தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே 
சுட சுட சுட ஆசை வருகிறதே
து ள்ளி துள்ளி துள்ளி துள்ளி உந்தன் மடியிலே
பனித்துளி மனசு விழுகிறதே

நட்சத்திர நடக்கும் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே

உலகெங்கிலும் சுகம் உள்ளது
அதை வாங்கிட பணம் உள்ளது
மனசு மயங்குது எதுக்காக

நமக்கானவன் யார் என்பதை
நம் கண்களால் நாம் தேடணும்
மனசு மயங்குது அதுக்காக

பார்வை சொல்லும் காதல் பாதை மாறி போனால்
அழகு பெண்ணின் வாழ்க்கை அப்போது என்னாகுமோ
காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை
கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடிக் கொள்ளுமோ

காதல் சுகமான தேடல்
உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
நதிகள் வீசுதே காதல் காதலே

சில நேரங்கள் விழ வைக்கிறதே
சில நேரங்கள் எழ வைக்கிறதே
எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு

விழ வைப்பதும் எழ வைப்பதும்
அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும்
அழகு பதுமையின் கையோடு

பாதி இதயம் அங்கே மீதி இதயம் இங்கே
எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்
அந்த நிலைதான் இங்கும் காதல் இதுதான் எங்கும்
உடைந்த உள்ளத்தை முத்தத்தில் ஒன்றாக்கலாம்

காதல் சுகமான தேடல் 
உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
அலைகள் வீசுதே காதல் காதலே




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...