Friday, November 15, 2024

MUSIC TALKS - KELADI KANMANI PAADAGAN SANGATHI - NEE IDHAI KETPATHAAL NENCHIL ORE NIMMADHI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி

எந்நாளும்தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல் தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்

கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீ அல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம் 
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...