வெள்ளி, 15 நவம்பர், 2024

CINEMA TALKS - OUTLANDER (2008) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



பொதுவான ஹாலிவுட் படங்களை போல இல்லாமல் அப்போதே புதிதாக யோசித்த ஒரு பட்ஜெட் படம் இந்த அவுட்லேன்டர் ! நம்முடைய கதாநாயகர் மனித இனத்தை சார்ந்த கேய்னான் என்ற ஏலியனாக இருக்கிறார். ஒரு விபத்தால் சேதமடைந்த  விண்கலனுடன் நார்வே-யில் வைக்கிங் போர்வீரர்களின் காலத்தில் பூமியின் தரையில் இறங்குகிறார் ! இங்கே அவனது விண்கலத்தில் இருந்து உயிரை கொல்லும் ஒரு ஏலியன் மான்ஸ்ட்டரும் பூமியில் இறங்குகிறது.  மேலும் வைக்கிங் கிராமங்களைத் தாக்க தொடங்குகிறது. கிராமத்து மக்கள் ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை விளக்க முயற்சிக்கிறான். ஆரம்பத்தில் கிராம மக்கள் நம்ப மாட்டார்கள், ஆனால் ஏலியன் அடிக்கடி பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் போது கதாநாயகன் சொல்வது உண்மை என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.தொழில்நுட்பத்தையும்  மற்றும் வைக்கிங்களின் பாரம்பரிய ஆயுதங்களையும் வைத்து எப்படி ஜெயிக்கிறார் என்று திரைக்கதையில் காட்டி இருக்கிறார்கள் ! சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கு அதிகமான மார்க்கெட் இல்லாத காலத்தில் வெளிவந்த இந்த படத்தில் கதை கொஞ்சம் புதிதாக இருந்தது. மற்ற சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களோடு கம்பேர் பண்ணினால் இந்த படம் பின்னடைவை சந்திக்கலாம் இருந்தாலும் இந்த படத்தின் புதுமைக்காக கண்டிப்பாக பாராட்டலாம். 



கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...