Thursday, November 21, 2024

GENERAL TALKS - இந்த வாழ்க்கையின் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி - 1 !

 

ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால் வெறும் கைகளோடு வேலை பார்க்காமல் நம்மிடம் சரியான கருவிகள் இருந்தால் கண்டிப்பாக சரிசெய்யலாம். ஒரு சுவரை வெறும் கையால் உடைக்க முடியாது. கடப்பாரை போன்ற வலிமையான ஒரு கருவி தேவைப்படுகிறது. 

நான் உனக்காக இருக்கிறேன் என்று சொல்லும் மக்கள் எல்லாம் வேலை என்று வரும்போது தன்னால் செய்ய முடியவில்லை என்று தோல்விக்கரமான முடிவுகளோடு கூறுகிறார்கள். 

ஒரு பிரச்சனையை களத்தில் இறங்கி சரிபண்ண அனைவரும் பயப்படுகிறார்கள்.சரியான சப்போர்ட் கிடைத்தால் அவர்களைவிட மேலான நிலையில் நாம் நம்மை மாற்றிக்கொள்வோம் என்பது மட்டும்தான் அவர்களின் கண்களுக்கு தெரிகிறது, 

மேலும் பின்னாட்களில் அவர்களுக்கு எந்த விதமான நன்மையும் செய்யமாட்டோம் என்று ஒரு போலியான கருத்தை மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். 

நாம் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டால் எங்கே இவர்களை கைவிட்டுவிட்டு கண்டும் காணாமல் சென்றுவிடுவோமோ என்று இவர்களுக்கு நம்பிக்கையே இல்லாத ஒரு மனநிலை இருக்கிறது. 

இங்கே நாம் மட்டும் முன்னேறாமல் அடுத்தவர்களுக்கு முன்னேற்றம் செய்ய வேண்டும் என்று பிறக்கும் ஒரு ஒரு மனுஷனுக்கும் கட்டாயமாக தலைவிதி இருக்கிறதா என்ன? 

கண்டுபிடித்த விஷயம் என்னவென்றால் "வெளிப்படையான கருத்து = மறைமுகமாக பொறாமை" கொண்டது. சரியான சப்போர்ட் கிடைத்திருந்தால் நம்மால் மேலான நிலைக்கு போக முடியும். இங்கே சரியான சப்போர்ட் வெளியில் இருந்து வராது என்பதால் நம்மிடம் எதுவும் இல்லாத நிலையில் நமக்காக யாரும் இல்லை என்பதால் என்று நாம் உதவி என்று கேட்கும்போது அவர்கள் நம்மை பரிதாபகரமாக பார்க்கிறார்கள்.

இவர்கள் இப்படி நமக்கு சப்போர்ட் பண்ணாமல் இருப்பதால் நாம் நிறைய விஷயங்களில் பின்னடைவு அடையாமல் கஷ்டப்பட்டாலும் சந்தோஷமாக ஒரு வாழ்க்கையை உருவாகி தனித்தே ஜெயித்து காட்ட வேண்டும். இது கண்டிப்பாக பெரிய விஷயம் அடுத்த போஸ்ட்டில் இன்னும் விரிவாக இதனை பற்றி பேசலாம் !



No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...