Friday, November 29, 2024

STORY TALKS - EP.004 - இது இந்த விஷயங்களுக்குள் அனுபவப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே புரியும் !




பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அவைகள் உயிரற்றது. ஆனால் அந்த மனிதன் கஷ்டப்பட்டு நன்றாக பழகி நன்மதிப்பை பெற்று சம்பாதித்த நட்பும் உறவுகளும் ஆதரவுகளார்களும் கண்டிப்பாக ஒருநாள் கஷ்டப்படும்போது  கைகளை விட்டு சென்று விடுவார்கள். 

இன்னும் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் நாம் வளர்த்து விட்டு சந்தோஷமாக வாழும் சதிகார ஆட்கள் கடைசியில் நமக்கே பின்னால் முதுகில் கத்தியால் குத்திவிட்டு செல்கிறார்கள். இது மிகவும் கேவலமான செயல் மேலும் இந்த குறிப்பிட்ட செயலினால் அடிப்படையில் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே மொத்தமாக உடைகிறது. 

இவர்களின் தேள் போன்ற விஷம் நிறைந்த மனங்களோடு நாம் வாழ்ந்தாலும் நாம் நிச்சயமாக இவர்களால் தொட முடியாத உயரத்துக்கு சென்று வெற்றியடைய வேண்டும். கஷ்டப்பட்டு வெற்றியடைந்துவிட்டு அவர்கள் நம் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்ததால் நம்மை உள்ளாற வெறுத்ததால் எந்த விதமான விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என்பதை அவருடைய கண்களுக்கு  முன்னால் காட்ட வேண்டும். 

நமக்கு சரியான நேரத்தில் சரியான அளவு நம்பிக்கையான ஆட்களாக இருந்திருந்தார்கள் என்றால் அவர்களை கஷ்டப்பட்டு முன்னேற்றி விடலாம் 

இப்போது நீ எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன ? என்று கஷ்டப்படும் காலங்களில் உதவாமல் விலகி விட்டு சென்ற இவர்களை சத்தியமாக கொஞ்சமும் மதிக்கவே கூடாது இவர்களுக்கு மதிப்பு கொடுப்பது என்பது மிகவும் மூடத்தனமான மடத்தனமான செயலாக தான் இருக்கும். 

பணத்தை பொருத்தவரைக்கும் யாருமே யாரையுமே நம்பக்கூடாது என்ற கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் நடைமுறை பிரச்சனை என்னவென்றால் பணம் விஷயத்தில் நூறு சதம் நம்பி நன்கு யோசித்து சரியான முறையில் பணம் ஆதரவு கொடுத்திருந்தால் நமக்கு ஒரு கஷ்டம் என்று வரும்போது பதில் உதவி செய்யக்கூடிய நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். 

தன்னுடைய பணத்தை தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆணவத்துடன் இருந்து கடைசியில் வீணாக ஆதரவு இல்லாமல் இருந்தே பரலோகம் சென்றுவிடுவார்கள் என்பது தான் மிகவும் பரிதாபமான விஷயம். 

மனிதர்களே ஒரு மெட்டீரியல்லிஸ்ட்க்கான வாழ்க்கைக்கு நகர கலாச்சாரம் தள்ளிவிடுகிறது என்பதால் மனிதர்கள் மனநிறைவு இல்லாமல் இருக்கிறார்கள்.  ஆனால் சக்திகளை அதிக்கப்படுத்தி பொருட்களை சம்பாதித்த மனிதர்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் தேடும் மனநிறைவை தேவையான அளவுக்கு சம்பாதித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதுகான் உண்மை !

 ஏனென்றால் காரணம் என்னவென்றால் அவர்கள் மற்றவருடைய ஆதரவை விடவும் மன்றங்கள் இருந்து கிடைக்கக்கூடிய மெட்டீரியல்களில் தான் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் இந்த மெட்டீரியர்கள் போதுமான நிறைவே கொடுத்து விடுகிறது மேலும் வாழ்க்கைக்கு ஓரளவு முழுமையாக முழுமை தன்மையும் கொடுத்து விடுகிறது.


No comments:

Post a Comment

STORY TALKS - EP.011 - கஷ்டப்பட்டு வாழ்க்கையில் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் ! [#004]

1. உங்களுடைய சந்தேகத்தை தூக்கி எறிந்தால்தான் நெடு நேரம் ஒரே விஷயத்தில் வேலை பார்த்து வெற்றி அடைய முடியும். உங்களுடைய சாக்கு போக்குகளை தூக்கி...