வெள்ளி, 15 நவம்பர், 2024

MUSIC TALKS - NEEDHANE ENTHAN PON VASANTHAM - PUDHU RAJA VAAZHKAI NAALAI UN SONDHAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



நீதானே எந்தன் பொன்வசந்தம் 
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் 
என் வாசல் வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம்  அரங்கேறும் கண்ணோரம்

பாதை முழுதும் கோடி மலர்கள் 
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை மிதக்கின்ற பாலாடை 
உன் காலை குளிப்பாட்டும் நீரோடை

வெயில் நாளும் சுடுமென 
தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்

சிறு காதல் விழிகளில் 
வீசும் மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும் 
சந்தோஷம் உன்னோடு 
கைவீசும் எந்நாளும்

ஈர இரவில் நூறு கனவு 
பேதை விழியில்
போதை நினைவு 
பன்னீரில் இளந்தேகம் 
நீராடும் பனிப்பூக்கள் 
உனைக்கண்டு தேனூறும்

நீ ஆடை அணிகலன் 
சூடும் அறைகளில் 
ரோஜா மல்லிகை வாசம்
முகவேர்வைத் துளியது
போகும் வரையிலும் தென்றல் 
கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும்
முத்தாரம் எந்நாளும்




கருத்துகள் இல்லை:

@TAMIL-CINEMA-REVIEW - THE DEVIL WEARS PRADA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

இந்த திரைப்படத்தின் கதை எளிமையானது , நேரடியாக படத்தை பார்த்தே தெரிந்துகொள்ளுங்கள் ஆனால் திரைப்படத்தின் கதைக்களம், புகழ்பெற்ற ஃபேஷன் இதழியல் ...