Thursday, November 7, 2024

CINEMA TALKS - PLANET OF THE HUMANS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இந்த ஆவணப்படம் பற்றி கண்டிப்பாக பேசி ஆக வேண்டும் ! PLANET OF THE HUMANS - இந்த விமர்சனத்தை எப்படி ஆரம்பிப்பது ? இப்போது நம்ம கருப்பு பாறை நிறுவனத்தை பற்றி பேசலாம். இது உலகின் மிகப்பெரிய முதலீட்டு மேலாண்மை நிறுவனம். மேலும் சந்தையில் இதுக்கு மவுசு அதிகம்.  முன்னணி ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு பண்ணாத விஷயங்கள் இல்லை. காடுகள் அழிப்பு முதல் நிறைய பேருடைய வறுமைக்கு காரணம் நம்ம தலைவன்தான். அதுவும் சில நாடுகளில் நம்ம தலைவன் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் பல நாடுகளில் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதற்கான வேலைகளை பார்த்து கஷ்டப்படுத்திய நாட்களும் உள்ளன. இந்த கம்பெனி வழக்குகள் மற்றும் தண்டனைகள் எல்லாமே சரியாக இந்த கம்பெனியை தாக்கியதா என்றால் அதுதான் இல்லை ! இதனால், பிளாக்ராக் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது நம்ம தலைவன் சுற்றுச்சூழல் அழிப்பு பண்ணாத ஏரியாவே கிடையாது. ஆல் ஏரியா நம்ம தலைவன் கில்லி. இருந்தாலும் பணம் அதிகமாக இருப்பதால் பல நிறுவனங்களில் பாறையில் முதலீடு செய்தால் பணமாய் கொட்டும் என்று முதலீடு செய்வதால் உருவாகும் தொல்லை கடுமையான விமர்சனங்களுக்கு ஃபோன் தயாரிப்பு நிறுவனம் சாத்துக்குடியை போல நாங்கள் இப்படித்தான் வேலையை காட்டுவோம் உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கொள் என்று சொல்லுவது இந்த நிறுவனம் ஆகும். இருந்தாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு மக்கள் இந்த நிறுவனத்தில் பணத்தை கொட்டுவதால் இந்த நிறுவனத்தின் சக்தி அதிகமாகிறது. சக்திகள் அதிகமானால் இந்த நிறுவனம் பண்ணும் பாதிப்புகளும் அதிகமாகிறது. இது மட்டுமே உலகத்துக்கு இருக்கும் பிரச்சனையா என்று கேட்டால் சுற்று சூழலை பெரு நிறுவனங்கள் எப்படி அழித்துக்கொண்டு இருக்கிறது என்பதையும் மக்களை மூளை சலவை பண்ணி நிறுவனங்கள் சம்பாதிக்க காடுகளையும் அங்கே வாழும் உயிர்களையும் மலை வாழ் மக்களையும் எப்படி நீக்க முயற்சிக்கிறது என்பதையும் இந்த ஆவணப்படத்தில் ப்ரொடக்ஷன் குழு தரமாக விளக்கி உள்ளது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்று இந்த படத்தை சொல்லலாம் !! 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...